வரும் டிசம்பர் 10,11,12 ஆகிய தேதிகளில் டெல்லி தமிழ் சங்கம் ஒரு சிறந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதில் மிக முக்கிய பங்காற்றும் திரு ஷாஜஹான் மற்றும் தமிழ் சங்க நண்பர்கள் முனைப்புடன் எடுத்து வரும் முயற்சிகள் வெற்றிபெறும் என்று உறுதியாக நம்புகிறேன். குறிப்பாக நான் டெல்லி வந்த பிறகு (கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் ) இப்போது தான் தமிழகத்தின் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், கள ஆய்வாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இங்கு நடைபெறுவது பற்றி கேள்விப்படுகிறேன். என் மனம் கவர்ந்த பல எழுத்தாளர்கள் இதில் பங்கேற்கிறார்கள். தலைநகரில் இருக்கும் நண்பர்கள் அவசியம் வரவும். தமிழக நண்பர்கள் வருவதற்கு வாய்ப்பிருந்தால் கூடுதல் சந்தோஷம்.
கருத்தரங்கில் பங்கேற்பவர்கள் பதிவு செய்து கொள்ள
sangamtamil2010@gmail.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
( இத் தகவலை தங்கள் வலைப்பூவிலும் வெளியிடலாம் )
அஞ்சலின் பொருள் பகுதியில் - Registration for Participation - என்று குறிப்பிட வேண்டுகிறோம்.
பங்கேற்க விரும்புவோர்
பெயர்
முகவரி
தொலைபேசி எண்
அவசியம் தர வேண்டும்.
ஆர்வமுள்ள துறை(கள்)
விவரங்களைத் தருவது எதிர்கால நிகழ்ச்சிகளுக்குப் பயன்தரும்.
நிகழ்ச்சி பற்றி டெல்லியில் வசிக்கும் எழுத்தாளர் எம்.ஏ.சுசிலா அவர்கள் எழுதிய பதிவு..
Enna nanbare..
ReplyDeletenangalum varalaamaa?
நன்றி மோகன். நானும் சுசீலாம்மா பதிவில் படித்தேன். இது ஒரு நல்ல முயற்சி. ஊரிலிருந்து எப்போது திரும்பினீர்கள்?
ReplyDeleteதிங்கள் கிழமை வந்தேன் வெங்கட் சார்.
ReplyDeleteஎப்படி இருக்கிறீர்கள்? நிகழ்ச்சிக்கு நண்பர்களுடன் வாருங்கள். நாம் சந்தித்து நாட்களாகின்றன.
Dear Chandra,
ReplyDeletePlease write about this function, for us. Coming to Delhi is not possible now.
-Rajkumar
நிகழ்ச்சி சிறப்புற எனதினிய வாழ்த்துக்கள்.
ReplyDelete