வன்மத்தோடு சிலரை குறிவைத்து எறியப்படும் விஷ அம்புகளின் வீர்யத்தை பார்க்கும்போது எய்தவனின் மன விகாரம் எப்படிப்பட்டது என்று தெரியும். அவ்வாறு குறி வைத்து தாக்கப்படும் மனிதர்களில் இளையராஜா முக்கியமானவர். என் வாழ் நாளில் நான் கண்டு பிரமித்த , பல ஆயிரம் பாடல்களாலும், திரைப்படத்திற்கான பின்னணி இசையாலும் என்னை போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களை மனம் உருக வைத்த, மிக சிறந்த ஒரு படைப்பாளியின் படைப்புகளை இன்று வரை யாரும் சரியான பார்வையோடு பார்க்கவில்லை என்பது என் வருத்தம். தங்களை தாங்களே அறிவு ஜீவிகள் என்று கருதிக்கொண்டு அவரின் இசையை இலத்தீன் அமெரிக்க இசை ஞானத்தோடு அணுகி எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் சில ஜீவன்களுக்கு மத்தியில் (இந்த அறிவு ஜீவிகள் சென்னை புத்தக கண்காட்சியில் அல்பேனிய புத்தகங்கள் கிடைப்பதில்லை என்று அங்கலாய்க்கும் புத்திசாலிகள் ! அல்பேனிய புத்தக கண்காட்சியில் தமிழ் புத்தகங்கள் கிடைக்குமா என்றெல்லாம் கூட யோசிக்க தெரியாத அல்லது அதற்கு நேரம் இல்லாத அறிவு ஜீவிகள்..!) ஷாஜி எனும் மனிதர் வேறு பட்டவராக இருக்கிறார். அவரும் இசை பற்றிய கட்டுரைகளை எழுதுவதில்லை இசை அமைப்பாளர்கள் , பாடகர்கள் பற்றிய குறிப்புகளில் மட்டுமே அவர் சிறந்தவர் என்பது அவரை படிக்கும் அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் இளையராஜா பற்றிய கட்டுரை ஒன்றை உயிர்மை இதழில் எழுதியிருக்கிறார் ஷாஜி. உண்மையில் அது கட்டுரை அல்ல.. ஒரு படைப்பாளியை அவரது பிறப்பையும் பின்னணியையும் சுட்டிக்காட்டி 'உன் அளவோடு இரு' என்று எடுத்தியம்பும் மிக வன்மையான கருத்து கொண்ட எரிச்சல் தெறிக்கும் ஒரு அறிக்கை.
ஷாஜி பற்றி இங்கு சொல்ல வேண்டும்..மிக மென்மையான மனம் கொண்ட , இளம் பிராயத்தில் தன சொந்த தந்தையாலே பல முறை தாக்கப்பட்டு ..வாழ்வை மிக துயரத்துடன் கழித்தவர். இப்போதும் கூட அவர் வாழ்வின் துயரம் நீங்கிவிடவில்லை. பல்வேறு துயரங்களை தாங்கிக்கொண்டு வாழும் அவர்க்கு இசை மீது தீராத காதல். ஷாஜி எனக்கும் இணையத்தால் நண்பரானவர்.
ஆனாலும் ஷாஜியின் சமீபத்திய கட்டுரையின் உள்ளடக்கத்தை படித்த பின்பு அதை எழுதியது ஷாஜி தானா அல்லது அவர் டீ குடிக்க வெளியில் சென்றிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அறிவுஜீவி சாரு தான் இடையில் தன கருத்தக்களை அள்ளி விட்டிருக்கிறாரா என்று தான் நினைக்கதோன்றுகிறது.
கட்டுரையின் சில பாகங்களை அவர் என்ன மன நிலையோடு எழுதினார் என்று என்னால் கணிக்கவே முடியவில்லை.. ஷாஜி தன வாழ்நாளில் இவ்வளவு துவேஷம் கொண்ட கட்டுரை ஒன்றை எழுதியதில்லை.
முதலில் அவர் வைக்கும் விமர்சனங்களின் மீதான ஒரு சாதாரண ரசிகனின் கேள்விகள்:
முதலில் பழசிராஜா பற்றிய அவரது 'எண்ணங்கள்'. ஷாஜி முதற்கொண்டு ராஜாவிடம் முன்பு வேலை பார்த்த அவுசப்பச்சன் போன்ற அனைவரும் அப்படத்தின் இசை தோல்வியடைந்தாக சொல்கிறார்கள். ஆதி உஷ, குன்னத்தே, அம்பும் கொம்பும் போன்ற சிறந்த பாடல்கள் கொண்ட ஒரு படத்தின் இசையை தோல்வி என்று இவர்கள் என்ன அளவீட்டில் சொல்கிறார்கள்? பழசிராஜாவை பார்த்த பலர் சொன்ன கருத்து ஆஸ்கார் 'புகழ்' பூக்குட்டி தனது மேதைமையை பயன்படுத்தி ராஜாவின் இசையை தன 'சத்தத்தால்' பல இடங்களில் அமுக்கியிருக்கிறார் என்று . சமீபத்தில் தான் நானும் அப்படத்தை பார்த்தேன்.. தனக்கு கிடைத்த ஆஸ்காருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பூக்குட்டி ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். அந்த அவதியில் படத்தின் பின்னணி இசையை பல இடங்களில் தன சத்தம் கொண்டு அடக்கியிருக்கிறார். இது ராஜாவின் தோல்வியா? மிக முக்கியமாக , ஷாஜி போகிறபோக்கில் படத்தின் இசையின் தோல்விக்கு காரணமாக O.N.V குருப் பின் பாடல் வரிகள் அமைந்ததாக ராஜாவே சொன்னதாக குறிப்பிடுகிறார். இது அக்கிரமம். படத்தின் பாடல்கள் தோல்வி என்று ராஜாவே முடிவுகட்டியதாக நினைக்கிறாரா ஷாஜி? அவர் பேசிய பேச்சின் வீடியோ Youtube இல் கிடைக்கும்.கேட்டுப்பாருங்கள். வெள்ளையரை எதிர்த்ததால் இன்னல்களுக்கு ஆளாகி காட்டில் மறைந்து அங்கிருந்து போர் வியூகம் அமைக்கும் ஒரு மன்னரின் சோகத்தையும் அந்த பாடலில் கொடுக்க தெரிந்த ராஜாவையா நீங்கள் குற்றம் சொல்லுகிறீர்கள்? அந்த பாடலின் composing இல் நடந்த நிகழ்ச்சிகளை சொல்லும் நேரத்தில் O.N.V. குருப் தன tune க்கு எழுத முடியாமல் சிரமப்பட்டார் என்றார். இத்தனைக்கும் தன இசையில் புகழ் பெற்ற 'தும்பி வா' பாடலை எழுதியவர் அவர் என்று அந்த நேரத்திலும் குறிப்பிட்ட ராஜாவின் வார்த்தைகளை இப்படியா ஷாஜி திரிப்பீர்கள்? அதை தொடர்ந்து அங்கு வந்திருந்த அனைவரையும் 'நீளம்' கருதாமல் மலையாள 'பழசிராஜாவை' பார்க்குமாறும் வேண்டிக்கொண்ட ராஜாவை நீங்கள் அந்த வீடியோவில் பார்க்கலாம். இதற்கு அவருக்கு கிடைத்த சன்மானம் என்ன தெரியுமா ? படத்தின் இயக்குனரான ஹரிஹரன் . O.N.V. விவகாரத்தில் ராஜா கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை ..அது தனக்கும் M.T.V. நாயருக்குமான பொறுப்பு என்று திருவாய் மலர்ந்தார். என்ன ஒற்றுமை பார்த்தீர்களா? அதை தொடர்ந்து ஒரு சினிமா விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சி குறித்தும் இளையராஜா குறித்தும் , கேரளா அமைச்சர்கள் முதற்கொண்டு விமர்சனம் செய்ததை இங்கு உள்ளவர்கள் அறியவில்லை என்று நினைக்கிறாரா ஷாஜி? தொடர்ந்து மலையாள மனோரமா இளையராஜாவின் 'பா' இசையை ' recycle' செய்யப்பட்டவை என்ற 'உண்மையை' கண்டு பிடித்து எழுதுகிறது? எதற்காக? தன மண்ணின் கவிஞரான O.N.V பற்றி ராஜா விமர்சித்து விட்டாராம்? என்ன ஒரு ஒற்றுமை?இந்நிலையில் இளையராஜா பற்றிய கட்டுரை ஒன்றை உயிர்மை இதழில் எழுதியிருக்கிறார் ஷாஜி. உண்மையில் அது கட்டுரை அல்ல.. ஒரு படைப்பாளியை அவரது பிறப்பையும் பின்னணியையும் சுட்டிக்காட்டி 'உன் அளவோடு இரு' என்று எடுத்தியம்பும் மிக வன்மையான கருத்து கொண்ட எரிச்சல் தெறிக்கும் ஒரு அறிக்கை.
ஷாஜி பற்றி இங்கு சொல்ல வேண்டும்..மிக மென்மையான மனம் கொண்ட , இளம் பிராயத்தில் தன சொந்த தந்தையாலே பல முறை தாக்கப்பட்டு ..வாழ்வை மிக துயரத்துடன் கழித்தவர். இப்போதும் கூட அவர் வாழ்வின் துயரம் நீங்கிவிடவில்லை. பல்வேறு துயரங்களை தாங்கிக்கொண்டு வாழும் அவர்க்கு இசை மீது தீராத காதல். ஷாஜி எனக்கும் இணையத்தால் நண்பரானவர்.
ஆனாலும் ஷாஜியின் சமீபத்திய கட்டுரையின் உள்ளடக்கத்தை படித்த பின்பு அதை எழுதியது ஷாஜி தானா அல்லது அவர் டீ குடிக்க வெளியில் சென்றிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அறிவுஜீவி சாரு தான் இடையில் தன கருத்தக்களை அள்ளி விட்டிருக்கிறாரா என்று தான் நினைக்கதோன்றுகிறது.
கட்டுரையின் சில பாகங்களை அவர் என்ன மன நிலையோடு எழுதினார் என்று என்னால் கணிக்கவே முடியவில்லை.. ஷாஜி தன வாழ்நாளில் இவ்வளவு துவேஷம் கொண்ட கட்டுரை ஒன்றை எழுதியதில்லை.
முதலில் அவர் வைக்கும் விமர்சனங்களின் மீதான ஒரு சாதாரண ரசிகனின் கேள்விகள்:
'பா' படத்தின் பாடல்கள் பால்கியின் விருப்பத்திற்காக ராஜாவால் திரும்ப உபயோகிக்கப்பட்டன என்று படத்தின் இசை வெளியிடுவதற்கு முன்பிருந்தே பால்கியாலேயே அறிவிக்கப்பட்டு வந்த செய்தி. இதை ஒரு விமர்சனமாக இவர்கள் எழுதுகிறார்கள் என்றால் இவர்களின் அறியாமையை என்னவென்று சொல்வது?
தவிர்க்க முடியாமல் ரஹ்மானை இங்கு இழுக்க வேண்டியிருக்கிறது. ரஹ்மான் முஸ்லிம் மதத்திற்கு மாறிய ஹிந்து என்பதை தாண்டி .. இந்துவில் அவர் என்ன ஜாதியில் பிறந்தார் என்ற தகவல் யாருக்காவது தெரியுமா ? அதை பற்றி யாரேனும் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இளையராஜா ஒரு தலித் என்று மட்டும் தகவல் எழுதும் 'மனிதர்கள்' எல்லா கலைஞர்களின் பின்னணியையும் தானே எழுத வேண்டும்? ஆனால் இக்கட்டுரையில் ஷாஜி 'தலித்' என்னும் வார்த்தையை மட்டும் கவனமாக தவிர்த்து , அவர் தினக்கூலியாக இருந்தார் என்கிற வரைக்கும் எழுதுகிறார்? இப்போது தான் முதல் படத்திற்கு இசை அமைத்த ஒரு புது இசை அமைப்பாளரையா நீங்கள் எங்களுக்கு அறிமுகம் செய்கிறீர்கள்? ராஜாவை பற்றிய கட்டுரையில் அவரது பின்னணி பற்றி சொல்ல வேண்டிய அவசியம் என்னவந்தது?
மேலும் அவரது மேற்கத்திய இசைக்கு மூலம் அவர் 'ஒரு காலத்தில்' தலித் கிறித்துவராக இருந்ததாம். இதை நேரடியாக சொல்லாமல் பல வார்த்தைகளை போட்டு எழுதிகிறார் ஷாஜி. இது வன்மம் அல்லாமல் வேறென்ன?
இதை தவிர தன வன்மத்தை சமன் செய்ய ராஜா பற்றி அனைவரும் அறிந்த (அவர் ஒரே வருடத்தில் பல படங்களுக்கு இசை அமைத்தவர். 'நூற்றுக்கணக்கான' (!) அற்புதமான பாடல்களை தந்தவர்) போன்ற 'புத்தம் புதிய' தகவல்களை நமக்கு 'அளிக்கிறார்' ஷாஜி. ராஜாவின் பாடல்களையும் அவற்றின் தரத்தையும் அனைவரும் அறிந்திருப்பதால் அவற்றை பற்றி எழுத வேண்டியதில்லை என்றும் அதுவல்ல தனது கட்டுரையின் நோக்கம் என்று ' தன எண்ணத்தையும் நோக்கத்தையும்' தன்னை அறியாமேலேயே வெளிப்படுத்திவிட்டார் ஷாஜி. அவரது நோக்கம் ராஜாவின் 'அடாவடி தனங்களை' அம்பல படுத்துவது. அவரை ஒரு கொடுங்கோலராக சித்தரிப்பது.
வெளிநாட்டு இசை கலைஞன் ஒருவன் கொலை செய்து விட்டு வந்து ஆல்பம் போட்டாலும், "அந்த மாதிரியான ஒரு மன நிலைமையிலும் அவருக்கு எங்கிருந்து இசை வந்ததோ!" என்று சிலாகிக்கும் பாணி ஷாஜியுடையது. அவருக்கு பிடிக்க வேண்டுமென்றால் ஒரு இசை கலைஞன் , அகாலத்தில் இறந்திருக்க வேண்டும் அல்லது.. வாழ் நாள் முழுதும் துயரத்தை அனுபவித்து பின்பு மாண்டிருக்க் வேண்டும். அவரது இசை (கலைஞர்கள்!) பற்றிய கட்டுரைகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இது எளிதில் புரியும். வெற்றிகரமாக வாழும் இசை கலைஞர்கள் அவரை பொறுத்தவரை 'வணிக ரீதியில் வெற்றி பெற்றவர்கள்' .
(அதிலும் அவருக்கென பிரத்தியேக விதிவிலக்கு ரஹ்மான்! )
இங்கே ராஜா ரசிகர்களை எல்லாம் ஒரு சேர கேவலப்படுத்துகிறார் ஷாஜி. அவரது ரசிகர்கள் அவரை 'கடவுளாக' நினைக்கிறார்களாம். அவரது பொற்காலமான எண்பதுகளில் இசை அமைத்ததை போன்று அல்லாமல் அவ்வளவு தரமில்லாமல் தற்போது இசை அமைக்கும் பாடல்களையும் கண்மூடித்தனமாக ரசிக்கிறார்களாம். என்னை போன்ற பலரும் அவற்றின் அவர் தகுதிக்கு தரமில்லாத பாடல்களை ரசிப்பதில்லை என்றும் , அவருக்கு சரியான படங்கள் அமைந்தால் அக்குறைகளையும் அவ்வப்போது அவர் நிவர்த்தி செய்யும் போது சந்தோசம் அடைவதையும் இவர் அறிவாரா? இளையராஜா ரசிகர்கள் எவ்வளவு திறந்த மனதுடன் அவரை விமர்சனம் செய்த படி இசை பற்றி பேசிக்கொள்ளுகிறார்கள் என்று இணைய தளங்களில் சாதாரணமாக பார்க்கலாமே? வலைப்பூ எழுதும் ஷாஜி இவற்றை எல்லாம் படிக்கிறாரா இல்லையா?
தனது வன்ம வெளிப்பாட்டுக்கு சிகரம் வைத்தாற்போல் பழசிராஜாவின் 'அம்பும் கொம்பும்' பாடல் பாடகி தேர்வு காரணமாக தோல்வியடைந்ததாக குறிப்பிடும் ஷாஜி, அப்பாடல் யார் கவனத்துக்கும் வரவில்லை என்பதிலும் உள்ளூர சந்தோசம் கொள்கிறார்.
முக்கியமான கட்டம் இது தான். இளையராஜா பாப மார்லி , பாப் டிலான் இருவரையும் 'குப்பை' என்று சொன்னதாக கொதிக்கிறார். இதே 'கருத்தை' நம் அறிவு ஜீவி சாரு தூக்கி 'சொமந்தார்.'. நான் கேட்கிறேன். ராஜா அவர்கள் இருவரையும் 'குப்பை' என்று எந்த பேட்டியில் சொன்னார். அல்லது எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ..மேடையில்.. தனது புத்தகங்களில் .. எந்த இடத்தில இந்த மாதிரி சொல்லியிருக்கிறார். அவர் சொன்னதற்கான ஆதாரம் என்ன? இது கண்டிப்பாக தெளிவாக்கப்படவேண்டும். ஏனென்றால் இந்த குற்ற சாட்டை சொல்லி பல 'குப்பைகள்' குதித்துக்கொண்டிருக்கின்றன.
மேலும் அவர் விரும்பினால் மக்களுக்கு சேவை செய்வார் ஷாஜி. கோவிலுக்கு கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அவரவர் இஷ்டம். இதை மனதில் வைத்து அவரை 'மனிதம்' இல்லாதவர் என்று கதை கட்டாதீர்கள். ஒரு படத்துக்கு கோடி கணக்கில் வாங்கும் ஹாலிவுட் புகழ் இசை அமைப்பாளர்கள் மட்டும் ஏழை பங்காளர்களா? என்ன மாதிரியான பார்வை இது. இதுவும் உங்கள் இசை புலமையின் வழி வரும் சமூக அக்கறையா?
அவரது ஆன்மீக வாழ்க்கையை குறை சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. தனது இசை வெளியீட்டு விழாவுக்கு இருபது பெண்களை நிர்வாணமாக சைக்கிள் ஓட்ட வைத்து 'புரட்சி' செய்யும் வெளிநாட்டு இசை கலைஞனை வானளாவ புகழ தெரிந்த உங்களுக்கு இசை மீதும் இறை மீதும் பக்தி கொண்டு கட்டுக்கோப்பான முறையில் வாழ பழகிக்கொண்ட ராஜா உங்களுக்கு ஜீரணம் ஆக மாட்டார் தான் .
என்னவோ 1992 இல் தான் ராஜா 56 படங்களுக்கு இசை அமைத்ததாக புது கதை விடுகிறார். அவரது 80 களில் பல மொழிகளில் 50 க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு ஆண்டு தோறும் இசை அமைத்தார் என்பது.. இசை (கலைஞர்கள் !) கட்டுரையாளரான ஷாஜிக்கு யாராவது எடுத்து சொல்லுங்கள்.
தவிர கஸ்தூரிமான் படத்திற்கான இசை அமைப்பு சமயத்தில் வந்த இரு பெண்களிடம் , அவர்கள் வேறு இசை அமைப்பாளர்கள் இசை பாடியிருந்ததன் காரணமாகவே கடுமையாக நடந்து கொண்டார் என்று எழுதுகிறார். காரணம் தான் அல்லாத மற்ற இசை அமைப்பாளர்களின் இசையை அவர் ஒத்துக்கொள்ள மறுப்பவர் என்கிறார் ஷாஜி.
புறம் தள்ளிய ரஹ்மானை புகழும் ஷாஜி .. இவ்வளவு வெற்றிக்கு பிறகு ராஜா யாரை மதிக்க வேண்டும் ..ரசிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லி தர தேவை இல்லை. தனது முன்னோர்கள் மீது அவர் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும்.
சினிமா போன்ற தொழில் இடங்களில் ஆயிரம் நடக்கும். உங்கள் ஆதர்சம் மறைந்த லோகிதாஸ் , நடிகை ஒருவரை தன கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்று யாரவது எழுதினால் நீங்கள் கொதிக்க மாட்டீர்களா? இவற்றை எல்லாம் எழுத உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
இன்னொரு முரணாக தன்னை 'ராஜா' என்று தற்பெருமை பேசினார் என்று பிதற்றும் ஷாஜி, கட்டுரையின் இறுதியில் அவர் தன்னை குறைவாக மதிப்பிட்டுக்கொண்டார் என்கிறார். ராஜா என்று சொல்லிகொள்வது மரியாதை குறைவான விஷயமா? எதோ ஒரு ஆத்திரத்தில் ராஜாவை பற்றி எதிர்மறையான விஷயங்களை சொல்ல வேண்டும் என்று முனைந்திருக்கிறார் என்று அப்பட்டமாக தெரிகிறது.
கடைசியாக ...
அன்புள்ள ஷாஜி
சாருவை பற்றி நான் எழுதிய கட்டுரையை கண்ணில் கண்ணீர் வருமளவுக்கு சிரித்துகொண்டே படித்ததாக சொன்னீர்கள் நான்கு நாட்களுக்கு முன்பு. இன்றோ உங்களை பற்றியே ஒருகட்டுரை எழுத வேண்டி எனை தூண்டியது உங்களது வழக்கத்துக்கு மாறான , வன்மம் மட்டுமே நிறைந்த ..இளையர்ஜாவை பற்றிய சமீபத்திய கட்டுரை தான்..வேறெந்த உள்நோக்கமும் அல்ல..
ஏனெனில் நீங்களே என்னிடம் சொன்னது போல் நீங்கள் ஒன்றும் சாரு நிவேதிதா அல்ல..!
Thaliva ithai pathi naanu oru pathivu podunum illa ivungala pathi court la case pottu ilukanum ninachan aana unga pathivuku unmaya pathil sollatum apurm legala la yenna panrathunu mudivu panikalam
ReplyDeletejaay86@yahoo.com
நல்ல பதிலடி ஆயினும் ரஹ்மான் பெயரை உங்கள் கட்டுரையில் இழுக்காமல் இருந்திருக்கலாம்.
ReplyDeleteபுலிகேசி
கை குடுங்க சார்... பரவால்லே சும்மா குடுங்க..
ReplyDeleteநன்றி. இப்பதிவுக்கு.
பிரமாதம்! நான் எழுத நினைத்த பலதை நீங்கள் எழுதிவிட்டிர்கள். ராஜா பாப் மார்லேயை குப்பை என்று சொன்னதாக சொல்வதற்கு இவர்கள் காட்டும் ஆதாரம் அவுட்லுக்கில் சிறியவன் ஆனந்த் எழுதிய ஒரு சிறு குறிப்பு. அநத் கட்டுரையே ஒரு திரித்தல் கட்டுரை. அதில் ராஜாவிடம் என்ன கேள்வி கேட்கப்பட்டது என்பதே தெளிவில்லை. `I am beyond all these garbage' என்று ராஜா சொன்னதாக ஆனந்த் கட்டுரையை முடிக்கிறார். இதுதான் இவர்களின் ஆதாரம். இதில் இருக்கும் முக்கிய விஷயம் ராஜா பாப் மார்லேயை சொல்வதாக நாம் எடுத்துக் கொண்டால், பாவலர் வரதராஜனையும் குப்பை என்று சொன்னார் என்றுதான் அதிலிருந்து நாம் எடுக்க வேண்டும். ஆனால் பாவலர் மீதான ராஜாவின் அபிமானம் எல்லோருக்கும் தெரியும். ஆக ராஜா பாப்மார்லேயை குப்பை என்றார் என்பது திரித்தல், சாரு திரித்தல் செய்து கோயபல்ஸ்தனமாக பரப்பிய திரித்தல். பாப் டைலானை குப்பை என்றார் என்பது இப்போது ஷாஜி முன்வைக்கும் அப்பட்டமான பொய். அதற்கு இந்த முந்தயதை போன்ற அற்பமான அபத்தமான ஆதாரம் கூட கிடையாது. மற்ற திரித்தல்களை நீங்கள் விளக்கியுள்ளீர்கள்.
ReplyDeleteஇதற்கெல்லாம் மௌனத்தையும், கருத்தை திரித்து வேறு கேள்விக்கு பதில் அளிப்பதையும், கருத்து சொன்னவனை கேவலப்படுத்தும் வேலையையுமே சாரு செய்வார். ஷாஜிக்கு எந்த அளவு நேர்மை உண்டு என்பதை இன்னும் கொஞ்ச நாட்களில் இந்த எதிர்வினைகளை அவர் எதிர்கொள்வதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
fitting :)
ReplyDeleteரோசாவசந்த,
ReplyDeleteமிக சரியான அவதானிப்பு, ஆணந்தின் அந்த காழ்ப்பு நிறைந்த கட்டுரை பற்றி. எந்த வித தரவுகளும் இல்லாமல், மனம் போன போக்கில் ஒரு கட்டுரையை எழுதி விட்டு, பின் அந்த கட்டுரையையே இந்த எச்சில் குடிக்கு அலையும் மனிதரகள் ஆதாரமாக காட்டி, ராஜா பாப் மார்லே, டைலன், கத்தர் (வரதராஜன் பெயரை மிக தெளிவாக தவிர்த்து விட்டு) போன்றோரை குப்பை என்று சொன்னார் என மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள். ஒரு பொய்யை இப்படி சொல்வதன் மூலம் மெய் ஆக்கி விடலாம் என்பது இவர்களின் கனிப்பு. மெய் அப்படி ஒன்னும் அழிந்து விடாது, ஏதேனும் ரூபத்தில் அது தன்னை புலப்படுத்தும். ஆணந்தின் அந்த கட்டுரை இதோ http://www.outlookindia.com/article.aspx?228024
'அன்புள்ளம்' கொண்ட ஷாஜி இந்த கட்டுரையை படித்து தெளிவு பெறட்டும். அன்பற்ற ராஜா தனது வரலாற்று கடமையை செய்து கொண்டிருக்கட்டும். 1999'இல் வெளியான பிரேம்:ரமேஷின் 'இளையராஜா: இசைமொழியும் தத்துவமும் என்ற புத்தகத்துக்கு செவ்வி அளித்த ராஜா இதே போன்றதொரு கேள்வியாய் புரட்சிகர மற்றும் மக்க்ளுக்கான் இசை படைப்பத்தை பற்றி கேட்க்கபட்ட பொழுது, மிக தெளிவாக மக்களை உறக்கத்தில் இருந்து எழுப்பும் அவ்வகை இசை சமூகத்துக்கு மிகவும் அவசியம் என்றும், ஆணால் அந்த இசை அனிச்சையாகவோ, இச்சையாகவோ செய்யாத பட்சட்த்தில் சும்மா இருப்பதே மேல் என்கிறார்....
...ஆர்த்தம் புரியாத கபோதிகளுக்கு எனது மொழிபெயர்ப்பு "புரட்ச்சிகர இசை என்பது ஆத்மார்த்தமான அர்பணிப்பு உனர்வோடு செய்ய வேண்டும், சும்மா நானும் புர்ச்சி பன்றேன் சமூகதிற்க்கு சேவை செய்கிறேன் என்னும் இந்த முதலாளித்துவ சமூக சட்ட திட்டகளுக்கு உட்பட்டே 'பிரே ஃபார் மீ பிரதர்' என்று சோனி கம்பெனியின் வழிக்காட்டுதலில் புரட்சி செய்யாதே" (தவிர்க்க முடியாமல் அவரை பற்றி இழுத்து விட்டேன், மன்னிக்கவும்).
ReplyDeleteஇப்பொழுது ஷாஜி எழுதி இருக்கும் இந்த கட்டுரையே நாளை சாரு போன்றோருக்கு ஓ.என்.வி.யை பழசிராஜா பாடல்களின் தோல்விக்கு காரணம் என்று கூறினார் ராஜா என எழுதுவதற்க்கு ஆதாரமாகி விடும். தனக்கு நன்றாக தெரியாத ஒரு விஷயத்தை, ஒரு பொது மேடையில் ராஜா எதற்க்கு கூறினார் என வியக்கும் ஷாஜி போன்றோருக்கு இலவசமாய் sivajitv.com மற்றும் youtube'இல் கிடைக்கும் ராஜாவின் பேச்சை கேட்க நேரம்தான் இருக்காது.
வாசகர்களுக்கு இங்கு இருக்கு லிங்கு:
Part I
http://www.youtube.com/watch?v=2RFfBx8UeZs
Part II
http://www.youtube.com/watch?v=Z0rvMg4Xpb0
படத்தின் பாடல்களின் தோல்விக்கு காரணம் ஓ.என்.வி என எங்காவது அவர் சொல்லி இருப்பதை இந்த விடியோக்களில் கண்டுபிடித்து எவரேனும் சொல்லி விட்டால், ராஜா ரசிகர்கள் நாங்கள் கூட்டமாக தற்கொலை செய்து கொள்கிறோம். சாருவை போல் இது வெத்து ஜம்பம் இல்லை 'பா' பட பாடல்கள் வட இந்தியாவில் நல்ல ஹிட் ஆகி விட்ட பின்பும் தொடர்ந்து வெட்கமில்லாமல் எழுதி கொண்டிருக்க. அவருக்கு வெட்கம் எல்லாம் இல்லை என்பது தான் நமக்கு தெரியுமே என கேட்காதீர்கள். பாவம் அவர் தனது பெட்ரூமில் 'தென்றல் வந்து தீன்டும் போது' பாட முடியாமல் கஷ்டபடுகிறார். பதிலாக எமினெமின் 'BLEED YOU BITCH BLEED' என பாடுவார், அதனால்தான் அவருக்கு வெடகமில்லாமல் போய் விட்டது. குறைந்தபட்ச நேர்மையையாவது நாம் அவரிடம் எதிர்பார்க்க முடியுமா? அவதாரத்தின் அந்த பாடல் ஒரு பார்வையற்ற பென்ணுக்கு வன்ணங்களை பற்றி விளக்கும் ஒரு முயற்சி, காதல் பாடல் அல்ல, என்பதை அவர் நேர்மையாய் அலசி பார்க்க தயாரா?
ReplyDelete...யுவனின் பருத்திவீரன் பாடல்களை சிலாகித்து மன்னின் இசை இது, இப்படி ராஜாவிடம் எதிர்பார்க்க முடியாது என எழுதிய அவர் யுவனின் 'ஊரோரம் புளிய மரம்' என்ற பாடல் ராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் வந்த 'திருவிழா கூத்து' எனும் பாடலின் அப்பட்டமான பிரதி என்பதை பரிசிலிக்க தயாரா? 'திருவிழா கூத்து' பாடலின் கடைசி வரி எந்த நகரத்து/நாகரிக மனிதனினும் கலாச்சார பொய்மைகளை தகர்த்து விடும் ஆற்றல் கொண்டது என்பதை அவர் மறுப்பாரா? தெரிந்தே அதை தனது இசையில் படைக்கும் ராஜா, இவர் போன்றோரின் அற்ப புத்திசாலித்தனங்களுக்கும், wikipedia எழுத்துக்களுக்கும் பிடிபடமாட்டார். மெய்யான பின் நவீனத்துவ இசை படைத்து இந்த சமூகத்தை முடுக்கி விட்டு கொண்டே இருக்கிறார். அவரது இசை கலடைஸ்கோப் போல் பல்வேறு கோலங்களை உள்ளடக்கியது, இது புரியாத 'கற்பூர' வாசம் அறியாததுகள்...தங்கள் நிலையில் இருந்து பரினாம வளர்ச்சி பெற எத்தனிக்காத வரை ஒன்றும் செய்ய முடியாது.
ReplyDeleteபின்னுட்டம் இட வந்து மிக நீன்டு விட்டது, மன்னிக்கவும் :)
you have given a very good reply (kick )to shaji's false message. I hope here after he should keep close his mouth & so and so
ReplyDeleteசாரு மூஞ்சில சேறு! ராஜா, ரஹ்மான், இருவருக்கும் பத்மபூஷன் விருது கிடைத்து இருப்பதால் வடக்கின் அங்கிகாரம் ராஜாவுக்கும் உண்டு என நிருபிக்கபட்டுவிட்டது.
ReplyDeletehttp://pib.nic.in/release/release.asp?relid=57307
இனியாவது எழுதுவதை அந்த அசிங்கம் (உபயம்:ராஜப்ரியன்) நிறுத்துமா என பார்ப்போம். ஆணால் இந்த சந்தில் ஒரு புது காமடி பிட்டை போட்டு விட்டார் சேறு சே... சாரு.
http://charuonline.com/Jan2010/Elayarajacharu.html
///அதில் கொண்டு போய் நாட்டுப்புற இசையைக் கலந்தால் காப்பியில் சாராயத்தைக் கலந்தது போலத்தான் இருக்கும்.///
ஒசியில் குடிக்கும் இவருக்கு எப்படி தெரியும் coffee liqueur என்னும் ஒரு வகையினம் இருப்பது? அல்லது இவர் சுற்றி திரியும் யுரோப்பில் இதை யாரும் அவருக்கு அறிமுகப்படுத்த வில்லை போலும்.
http://coffeetea.about.com/cs/alcoholic/a/liqueurs.htm
பாவம் பொழச்சு போகட்டும் பழச்'சாறு'.
///பாப் மார்லியைச் சொன்னது போல் ஆந்திரப் பிரதேசத்தின் புரட்சிப் பாடகன் கத்தாரையும் மாத்ருபூமி என்ற மலையாள இதழுக்கு அளித்த பேட்டியில் இளையராஜா குப்பை என்று சொல்லியிருக்கிறார். ///
இவ்வளவு நாள் அவுட்லுக் என சொல்லி வந்தார், இப்பொழுது அந்த பேட்டி வெளியானது 'மாத்ருபூமி' என கூறி, அவர் மிகவும் பிரபலமான மலையாள கரையோரம் ஒதுங்கி விட்டார் போலும். சும்மா விட மாட்டோம்டி, வக்காளி அந்த பத்திரிக்கை செய்தி உள்ள லிங்க அல்லது ஸ்கேன் இமேஜ் இனையத்துல பதிவேற்றம் பன்னு, இல்லை மூடிட்டு இரு. கத்தார் கிட்ட போய் சொல்லுமாம் அவரும் இந்த முஞ்ச பார்த்து நம்பிட்டு, துப்பாக்கியோட வந்துடுவாராம். உன்னையத்தான் ரொம்ப நாள பார்க்கனும்ன்னு காத்துகிட்டு இருகாங்க 'நக்ஸல்பாரிகள்' போ போய் பார்த்து சொல்லிட்டு... அப்படியே போய் சேரு.
Nice post Chandar. A very good reply. A few points which have come out well in your post and in the comments are:
ReplyDelete1. Like Tom Cruise said in a movie, "Show me the money", we now tell Shaji and Charu and the likes, "Show me the evidence." So all Illayaraja fans must first ask these people, "Show me the evidence." As pulikesi as pointed out, Charu now hides behind the facade of 'Matrubhoomi'. Anand's Outlook article is nowhere clear as to what Raja considers as 'garbage'. If Charu and Shaji are really interested, they should ask for the complete transcript of that interview.
2. The criticism is not about music. This is very clear in Shaji's article. The more 'damaging' critical analysis that he does is to say that Manjari singing 'ambum kombum' is wrong.
3. It is better if these people stop writing such unwanted and bitter articles because others may start asking questions about the artists that they uphold as great. That would be unfortunate but sometimes becomes unavoidable. And when questions are asked about their favorite artists, obviously you will not get an answer.
4. As you rightly pointed out, there are innumerable fans of Raja who are more than willing to dissect, analyze and criticize his music. It is well known that of all the critics, Raja's own fans are the harshest. They expect nothing less the very best and anything they feel is not upto mark, they are the ones who will immediately express their displeasure.
It is very important that such responses like yours, in a very clear headed manner give the other side of the story.
Pulikesi,
ReplyDeleteYou must probably change your name to 'paana patra onandi'. You did to Shaji and Charu, what 'onandi' did to Pulikesi in the movie LOL.
நண்பர்களுக்கு மிக்க நன்றி !
ReplyDeleteநாம் அனைவருமே ராஜா ரசிகர்கள் என்றாலுமே நமக்கும் அவருடைய சமீபத்திய பாடல்கள் மீது வெவ்வேறு கருத்துகள் உண்டு.
விமர்சகனின் பணியும் அது தான், ஆனால் எல்லை தாண்டி தனிப்பட்ட முறையில் ஒருவரை தாக்கி கொண்டே இருப்பது என்பது ஜீரணிக்க முடியாத ஒன்று. அவரது இசை பற்றி இன்னும் சரியான பதிவுகள் வராத நிலையில் இப்படிப்பட்ட உள்நோக்கம் கொண்ட கருத்துகளுக்கு நாம் பதில் அளித்தாக வேண்டும். அதை தான் உங்களில் ஒருவனாய் நானும் செய்தேன்.
மேலும் ரோசாவசந்த் , சுரேஷ், புலிகேசி உங்களின் பதிவுகளுக்கு நான் பரம ரசிகன். உங்களின் ஆதரவு எனக்கு சந்தோசம் அளிக்கிறது.
Happy to see at least some people who can differentiate between the truth and what appears to be the truth! Thanks for the on-the-dot post and precise specific replies, friends!
ReplyDelete// எல்லை தாண்டி தனிப்பட்ட முறையில் ஒருவரை தாக்கி கொண்டே இருப்பது என்பது ஜீரணிக்க முடியாத ஒன்று. அவரது இசை பற்றி இன்னும் சரியான பதிவுகள் வராத நிலையில் இப்படிப்பட்ட உள்நோக்கம் கொண்ட கருத்துகளுக்கு நாம் பதில் அளித்தாக வேண்டும்//
ReplyDeleteமிகச்சரியாய்ச் சொன்னீர்கள் சந்துரு. வணிகரீதியாக எதையாவது எழுதி பரபரப்பு உண்டு பண்ண மட்டுமே தெரிந்த அவர்களுக்கு என்ன சொல்லியும் புரியாது.
http://www.vallinam.com.my/issue14/column1.html
ReplyDeleteமிகப்பெரிய புத்திசாலித்தனமோ உயர்ந்த கற்பனை வளமோ
மேதைகளை உருவாக்குவதில்லை.
மாறாத அன்பு, அன்பு, அன்பு மட்டுமே
ஓர் உண்மையான மேதையின் ஆன்மாவாக இருக்கிறது
- மொஸார்ட்
இளையராஜ கூரிய கருத்து, பேட்டி, மேடைபேச்சு எல்லாமே பத்திரிக்கையில் எப்பொழுதுமே திரித்துதான் எழுதப்பட்டு வந்துல்லது அந்த வரிசையில் இப்பொழுது ஞாநி சாரு ஷாஜி. இவர்களுக்கு இளையராஜாங்கிர பேரு இவுங்க காதுல ஊத்துர திரவகம்... ராஜதிராவகம்
ReplyDeleteஷாஜியின் வழக்கமான மொழிபெயர்ப்பாளர் ஜெயமோகன் ,
ReplyDeleteஆனால் இந்த கட்டுரையை மொழி பெயர்த்தவர் வேறு(சாருவின் மொழி போல தெரிகிறது)
ஹாஜியின் வழக்கமான மொழியில் இந்த கட்டுரை இல்லை , அந்த மலையாள கவிஞரை ராஜா குற்றம் சொன்னார் என்றுதான் இந்த காழ்ப்பு என தோன்றுகிறது ,
மேலும் ஒன்று , இளையராஜாவால் ஜெமோவுக்கு 2 லட்சம் மதிப்புள்ள இலக்கிய பரிசு கொடுக்கப் பட்டதுதான் சாருவின் ராஜா வெறுப்புக்கு காரணம் என தோன்றுகிறது ,
ஏனெனில் அதுற்குப்பின் தான் சாருவால் ராசையா தொடர்ந்து தாக்கப்ப்பட்டார்
நீங்கள் சொல்வதுபோல, ஷாஜி கட்டுரையின் மொழி பெயர்ப்பைப் பார்த்தால் சாரு எழுதியது போல இருக்கிறது :).
ReplyDeletehttp://baski-reviews.blogspot.com
// நீங்கள் சொல்வதுபோல, ஷாஜி கட்டுரையின் மொழி பெயர்ப்பைப் பார்த்தால் சாரு எழுதியது போல இருக்கிறது//
ReplyDeleteஅந்த அளவிற்கு சாரு கெட்டிக்காரர் என்று நான் நினைக்கவில்லை. ஒருவேளை சாருவின் மலையாள நண்பர் மொழிபெயர்த்து, சாரு அதனைச் செப்பனிட்டிருக்கலாமோ என்னமோ? சாரு ஒரு சந்தர்ப்பவாதி. நாளையே ’தமிழகத்தின் சிறந்த இலக்கியவாதி’ அல்லது சிறந்த நான் லீனியர் நூல் என்று ஜீரோ டிகிரிக்கு ராஜா ஒரு வேளை பரிசளித்தால் (சாரி ஃபார் த விபரீத கற்பனை) “இளையராஜா இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த இசைக் கலைஞன்” என்று சாரு கட்டுரை எழுதி, அதை புத்தகமாக்கி ரஹ்மானைக் கூப்பிட்டு வெளியிடவும் செய்வார்.
சந்தர்ப்பத்திற்காகவும், புகழிற்காகவும் சாரு சார் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பது வாசகர்கள் அறிந்ததே!
மேகங்கள் சூரியனின் ஒளியை மறைப்பதில்லை. அதுபோல ராஜாவின் திறமையையும், ஞானத்தையும் இவர்கள் எத்தனை விமர்சித்தாலும் அவை மங்கி விடப் போவதில்லை. ராஜா ராஜாதான்.
- ராஜசாரு
Only recently ARR started speaking about Raja. Most of his early conversations never mention about Raja. He carefully avoided him as if speaking about him would diminish his commerical superiority.
ReplyDeleteகிதார் பிரசன்னா ஒவொருமுறை ராஜா அவர்களை சந்திக்கும் போது ராஜா பிரசன்னாவை "Miles Davis ", "John Coltrane " போன்றோர்களின் ஜாஸ் இசைகளை கிட்டரில் வசிக்க சொல்லி கேட்டு மகிழ்வாரம். அப்படிப் பட்டவரா "பாப் மார்லி" இசையை குப்பை என்று சொல்லிருப்பார்?
ReplyDeleteதிரு. சாரு அவர்கள் ராஜா உலக இசையை ஏற்றால் தான் தமிழ் படங்களுக்கு இசை அமைக்க முடியும் என்று சொல்கிறார். எந்த உலகத் திரை படத்தில் நாயகன் நாயகி மரத்தடி டூயட் பாடுகிறார்கள்? ராஜா இசையை ஹங்கேரி இசைக் கலைஞர்கள் வாசிக்கவில்லையா?
பாலா மற்றும் தங்கர் பச்சான் ராஜா இல்லையென்றால் தங்களுக்கு சினிமா வாழ்கை அமைதிருக்காது என்று சொல்கிறார்களே? இது ஷாஜிக்கு தெரியுமா?
ஆழ்ந்த நேர்மையான பதிவு சந்திரமோகன்.
ReplyDeleteஎல்லாமே தெரிந்தது போலப் பம்மாத்துக் காட்டும் போலி அறிவு ஜீவிகளுக்கு-அவர்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கவாவது இவ்வாறான கட்டுரைகள் வேகத்தடை போல உதவும் என்பதில் சந்தேகமில்லை.
தாங்கள் எழுதுவதையெல்லாம் அப்படியே ஏற்காமல் மாற்றுச் சிந்தனைகளைக் கொண்டிருக்கும் நபர்களும் உண்டு என்பதை அவர்களுக்கு இவை புரிய வைக்கின்றன.அல்லது புரிய வைத்தாக வேண்டும்.
உங்கள் விடாமுயற்சி,திரு ஜெயமோகனிடமிருந்து ராஜா குறித்த மிக நல்ல கட்டுரை ஒன்றை வரவழைத்து விட்டிருப்பது கண்டும் மகிழ்கிறேன்.
உங்கள் அறச் சீற்றம் பாராட்டுக்குரியது.
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி நண்பர்களே..
ReplyDeleteஜெயமோகனின் அற்புதமான நடுநிலைமையான கட்டுரை எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அறிவுஜீவியாகவோ அல்லது பின் நவீனத்துவவாதியாகவோ தங்களை நிலை நிறுத்திக்கொள்ள போராடும் சிலர் தான் ராஜாவை இகழ்வது அல்லது சமூக பொறுப்புகளை சுட்டிக்காட்டும் பாவனையில் அவரின் தனிப்பட்ட விஷயங்களை குத்தி காட்டுவது போன்ற வேலைகளை எந்தவித கூச்சமும் இல்லாமல் செய்து வருகிறார்கள். ஜெயமோஹனுக்கு அது போன்ற எந்த அவசியமும் இல்லை. எனவே தான் நம் காலத்தில் நம்முடனே வாழ்ந்து வரும் ஒரு கலைஞனை பற்றி ஒரு சிறப்பான கட்டுரையை மனம் திறந்து எழுதியுள்ளார்.
அவருக்கு என் மனமார்ந்த நன்றி!
என் பெருமதிப்பிற்குரிய அம்மா அவர்களின் பாராட்டை நான் பணிவுடன் ஏற்கிறேன். இந்த கட்டுரை ஒருவருக்கு பதில் சொல்லும்விதமாக எழுதப்பட்டது. சொந்தமாக ஒரு விஷயம் பற்றி எழுதும்போது தான் நான் எப்படி எழுதுகிறேன் என்பது தெரிய வரும். எனவே இனி எழுதப்போகும் விஷயங்களில் கவனமாக இருக்க முயற்சி செய்வேன். நல்ல பதிவுகளை தர வேண்டும் என்று நினைக்கிறேன்.
ithey ilayarajavin mahan karthik raja oru interview vil A.R.Rahman na appadinnna yaarunnu kettane, athu theriyuma.
ReplyDeletesyedbuhari அவர்களுக்கு
ReplyDeleteகார்த்திக்ராஜா கூரியது ரகுமான் நல்ல ஒலிப்பதிவாளர் தான் இசையமைப்பாளர் கிடையாதுனு தான் சொல்லி யிருந்தார். நீங்கள் கூரியது போல் சொன்னாது arr தான் ஒரு ஆங்கில வார இதழுக்கானா பேட்டியில். ரகுமான் கூரியது எனக்கு செவிவழி செய்தியே கார்த்திக்ராஜா கூரியது குமுதத்தில் படித்தது
நெத்தியடி சார்..நன்றி..!!
ReplyDeleteThanks ji for this wonderful post! even i was carried away by charu and shaji's false messages! nethi adi! charu and shaji should stop writing if they are maanamulla thamizhans(or mallus)
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteI am Sorry Mr. Chandru... Nobody ask for your certificate for the Oscarian and Gramian.. Illayaraja is better than Rahman before Roja.... All da Best... U want My Name? Yasin Pudukkottai...
ReplyDeleteThank u Mr.Anonymous.
ReplyDeleteU can't understand the quality of music for which an academy award could be given. If u r happy that ur award winner has 'bought' these awards..then i can do nothing but smile at u.
Come forward with ur identity, so that i need not to know what is ur name Mr.Yasin.Thanks for ur comments.
Mr. Chandru I know the value of your smile.. I never post any comments for anybody and also i never read ohers blogs other than my friends.. But at this point I will stop reading your blog also.. You are such a poor guy who is hesitate to give recoginition to the acheivers.. Here also I am not blaming Raja but Rahman acheived more than Raja.. Thanks... This is Yasin from Pudukkottai, Railway Station Road.. Hope u remember me.. 9894777 888
ReplyDeleteMr. Chandru -
ReplyDeleteIR worshipers mostly do not like AR Rahman/his music and you are no exception. Slumdog millionaire is an hollywood movie and the music has entertained them - if you can't appreciate it, that means your ears are trained only to hear IR music. Matured music lover will appreciate all types of music and will never belittle any musician.
I do not care about shaji or anybody, but do not belittle ARR. Then you and shaji are same, absolutely no difference. Immediately all IR fans start appreciating your post - show how much grudge you all carry about ARR and his success.
Let us peacefully enjoy everybody's music.
Both IR and ARR are greats.
Mr Anonymous,Sad to know that you've seen only one side of the coin and made ur comments!!
ReplyDeleteThis post is a counter for Shaji and Charu's writings as they(always) glorify ARR and belittle IR.So,it becomes a basic requirement to evaluate the competencies of both.I do appreciate ARR and the heights he has reached.I am his fan and like his music and his love for tamizh.I was stunned to hear him say 'tamizh' and 'ella pugazhum iraivanukke' at the oscars ceremony!and for his tamizh song in couples retreat. But still I cannot tolerate if someone says that ARR is better than IR as IR's talent was not glorified outside of TN . If ARR is KamalHasan IR is Marlon Brando !
Thank u very much Bizzarree
ReplyDeleteU've given proper answer to those who think that we r against rahman.Poor people , they can't understand what i wrote.
I kept quiet bcoz i didn't want to answer them, as they haven't understood.
Thank u very much again!!!
chandru unakku OOOOOOOOOOOOOOOOO poda vendum OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOoo ( delhi kumaran)
ReplyDeleteஓவியர் கோவை ஜீவா அவர்கள் facebook-ல் தொடுப்பு[link] குடுத்ததால் இதை படிக்க நேர்ந்தது...ஷாஜியை எல்லாம் ஒரு பொருட்டாக கருதும் உங்களின் நிலை குறித்து நான் சந்தேகமும்,கவலையும் கொள்ள வேண்டியதாயிருக்கிறது...ஒரு பாட்டு...ஒரே ஒரு பாட்டு...போதும்..சொந்தமாக அவனை உருவாக்க சொல்லுங்கள்...அவனின் உள்ளும் புறமும் தெரிந்தவன் நான்...ஜீவாவை உங்களுக்கு பரிச்சயம் என்றால் தொடர்பு கொள்ளுங்கள்... பிறகு நாம் பேசலாம்..
ReplyDeleteநன்றி ..!
ReplyDeleteஷாஜியின் கட்டுரை வெளிவந்த சமயத்தில் பல இசை ரசிகர்கள் மனம் வருந்தினார்கள். நானும் அவர்களில் ஒருவன். எனவே இந்த கட்டுரை எழுதினேன். இதுவும் தேவை தான் என்ற நோக்கத்தில்.
ஜீவா சார் எனது mentor பல வகைகளில். நீங்கள் என்னை முகநூலில் அல்லது மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாமே.அல்லது உங்கள் எண், மின்னஞ்சல் முகவரி, ஏதேனும் கொடுத்தால் உங்களோடு தொடர்பு கொள்ள வசதியாய் இருக்கும்.
ஷாஜி பாப்கள்,கத்தார் போன்றவை குறித்து சொன்னது நிஜம்தான். ஆனால் அதை புரிந்துகொண்ட விதம்தான் தவறு. இதில் ஷாஜியை அனாவசியமாக குறை கூறவேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.
ReplyDeleteஅவுட்லுக் பேட்டி:
http://www.outlookindia.com/article.aspx?228024
சுருக்கம்:
Outlook asked Ilayaraja about Bob Marley, Bob Dylan, Gaddar, his communist brother Varadarajan and even the recent Live-8 performances where music became a mode of protest. "I am beyond such garbage," was his curt reply.