Monday, October 18, 2010

சாரு நிவேதிதா செய்யும் அத்துமீறல்களை பற்றிய என் கேள்வியும் பென்னேஸ்வரனின் பதிலும்..


சாரு நிவேதிதா என்ற முது பெரும் எழுத்தாளர் , தனது பதிவுகளில் கண்டதை உளறிக்கொண்டும் தன்னைத் தானே புகழ்ந்து எழுதிக்கொண்டும் சக எழுத்தாளர்களின் மீது விழுந்து பிடுங்கிக்கொண்டும் இருக்கிறார். சமீபத்தில் பாமினி என்ற பெண்(?!) சாருவின் ஆங்கிலப் புலமை மீது 'கவலையுற்று' எழுப்பிய கேள்விக்கு தனது 'மொழியில்' பதில் சொல்லி இருக்கிறார். அந்தப் பெண் வாசகியின் கேள்விக்கு சாருவின் வார்த்தைப் பிரயோகங்கள் வரலாற்று முக்கியத்துவம் பெற்றவை. இடையில் என்னவோ புதைபொருள் ஆராய்ச்சியாளர் கணக்குக்கு ஒரு 'எலக்கிய ஆய்வுக்கு' எழுபதாயிரம் செலவானதாக ஒரு புருடா வேறு. தமிழில் சமீப காலமாக உலவும் இப்படிப் பட்ட ஒரு போக்கு குறித்து உங்கள் கருத்து என்ன?

சந்திரமோகன் வெற்றிவேல்
புது டெல்லி
chandrabuwan@gmail.com


அன்புள்ள சந்திரமோகன்

உங்கள் பல கேள்விகளுக்கு நீங்களே விடையும் தந்திருக்கிறீர்கள்.

நீங்கள் சொல்லும் அந்தச் சரித்திரப் புகழ் பெற்ற பதிவினை நானும் படித்தேன். சாரு நிவேதிதாவை ரவியாகவும் அறிவழகனாகவும் நானும் என்னுடைய டெல்லி நண்பர்களும் அறிவோம். அடிப்படையில் மிகவும் மிருதுவானவர் சாரு. சற்று பயந்த சுபாவம் உண்டு அவருக்கு. நேருக்கு நேராக யாராவது அவரிடம் மோதினால் பதுங்கி நழுவுவதை நாங்கள் நிறைய பார்த்து இருக்கிறோம். அவர் பறைசாற்றிக் கொள்ளும் உலக ஞானங்கள் பற்றிய ஆச்சரியம் அவருடைய பதிவுகளைப் படிக்கும் பலரைப் போலவே எங்களுக்கும் உண்டு. ஏறத்தாழ ஒரு மனநோயாளியின் மனநிலையில் இருப்பது போல வேண்டுமென்றே அவர் எழுதுகிறார் என்பது அவருக்கும் நன்றாகத் தெரியும். இந்த வேஷத்தை அவர் விரும்பி அணிந்து கொள்கிறார் என்பது அவருடைய வாசர்கள் மற்றும் நண்பர்களைப் போலவே அவருக்கும் நன்கு தெரியும்.

அதனால் உங்களுக்கோ எனக்கோ வேறு யாருக்கோ இதில் எவ்விதமான ஆட்சேபணையும் ஆச்சரியமும் இருக்கக் கூடாது என்றுதான் நினைக்கிறேன்.


அதே நேரத்தில் அவர் பாமினி என்கிற பெயரில் அவருடைய அபிமான ‘வாசகி’ ஒருவர் எழுதியிருக்கும் கடிதத்தின் வாசகம் அந்த வாசகியின் மனநிலையையும் சற்று சந்தேகப்பட வைக்கிறது. நான் கேள்விப்பட்டது என்னவென்றால் சாரு மற்றும் தமிழின் ஓரிரு அதிநவீன எழுத்தாளர்கள் பல பெயர்களில் மின்னஞ்சல் கணக்குகளை பராமரித்து தங்களுக்குத் தாங்களே கடிதங்களும் பாராட்டுக்களும் எழுதிக் கொண்டும் பில்டப் கொடுத்துக் கொண்டும் வருகிறார்கள். இதைப் பல சென்னை நண்பர்கள் சொல்லி வருகிறார்கள். இந்த மேதாவி எழுத்தாளர்களின் தளங்களில் இவர்கள் பிரசுரித்துக் கொள்ளும் கடிதங்களையும் எதிர்வினைகளையும் பார்க்கும்போது சென்னை நண்பர்கள் சொல்வதை உறுதிப்படுத்துவது போலத்தான் உள்ளது. இது அந்த மேதாவி எழுத்தாளர்களின் தனிப்பட்ட உரிமை. இதற்கு யாரும் ஒன்றும் செய்யமுடியாது.

மற்றபடி சாரு நிவேதிதா எழுபதாயிரம் ரூபாய் செலவில் எழுதிய அதிமேதாவித்தனமான கட்டுரையை என்னைப் போன்ற பாமரர்கள் படிக்கும் வகையில் எங்காவது பிரசுரித்தால் மிகவும் வசதியாக இருக்கும்.

அரபி மொழி படித்தது பற்றி அடிக்கடி பேசிக்கொண்டு இருக்கிறார் சாரு. படிக்கும் போது சிரிப்புத்தான் வருகிறது. நான் ஒன்று செய்யலாம் என்று இருக்கிறேன். மும்பையில் என்னுடைய நண்பர் ஒருவர் அரபி மொழியை உண்மையாகவே படித்து இருக்கிறார். அரபி மொழியில் சில விஷயங்களை காணொளி வழியாக அவருடைய குரலிலேயே பதிவேற்றம் செய்திருக்கிறார். அரபு மொழியில் எண்களைப் பற்றிய ஒரு விளக்கமும் கொடுத்து இருக்கிறார். திருக்குரானை கைப்பேசியில் டவுன்லோட் செய்யும் முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறார். தாராவி பகுதியில் வசிக்கும் மிகச் சாதாரணமான மனிதர் அவர். அந்த எளிய மனிதர் என்றும் தான் செய்த வேலைகளைப் பற்றிப் பீற்றிக் கொள்ள வில்லை. தன்னுடைய அரபி மொழி அறிவைப் பற்றி எங்கும் எழுதிக் கொள்ளவில்லை. அந்த நண்பரை வைத்து ஒரு நாள் அரபி மொழியறிஞர் சாருவுடன் உரையாடச் சொல்லலாம் என்று இருக்கிறேன். அவரை வைத்து சாருவின் பாஷா மேதாவிலாசத்தை உலகறியச் செய்யலாம் என்று இருக்கிறேன்.

அதே போல ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஸ்பானிஷ் மொழியில் ஆய்வு செய்த சில மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களை விட்டு நண்பர் சாருவுக்கு ஸ்பானிஷ் மொழியில் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வைத்து அந்த உரையாடலை பதிவு செய்யச் சொல்லி அதை இணையத்தில் வெளியிட வேண்டும்.

அப்போதுதான் பாமினி போன்ற ரசிகைகளின் அன்புத் தொல்லைகள் சாருவுக்கு இருக்காது.

பெண் உரிமை வழக்குகளை எடுத்து வாதாடும் பெண் வழக்கறிஞர் ஒருவருடன் இதுகுறித்துப் பேசினேன். பாமினி என்பது தமிழக அறிஞர்களின் வழமைப்படி ஒரு கற்பனைக் கதாபாத்திரமாக இருந்தால் பிரச்னை எதுவும் இல்லை. பாமினி என்று உண்மையாகவே ஒரு பெண்மணி இருந்தால் சாருவின் கடிதம் அவருக்கு மன உளைச்சல் தந்திருந்தால் அவர் சாரு நிவேதிதாவின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். பாமினிக்கு அளிதது இருக்கும் பதிலில் உச்சபட்டச ஆபாசமும் வசையும் கலந்து இருக்கிறது. மிகவும் அநாகரிமான ஒரு அணுகுமறையை கடைப்பிடித்து இருக்கிறார் சாரு. பாமினி என்னும் பெண்ணுக்கு எதிராக சாரு இழைத்திருக்கும் குற்றத்துக்கு சட்டப்படி சாரு சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடலாம்.

ஒரு கட்டுரை எழுத எழுபதாயிரம் செலவு செய்ததாக சாரு எழுதியிருக்கிறார். பாமினி என்னும் அந்தப் பெண், சாருவின் கற்பனை கதாபாத்திரமாக அல்லாமல் மனிதரூபத்தில் இருந்து அவர் சாரு மீது வழக்குத் தொடுத்தால் இது போல ஒரு கடிதம் எழுதி அதனை இணையத்தில் பிரசுரம் செய்ததற்கு பல லட்சங்களை சாரு செலவு செய்ய வேண்டியிருக்கும். அவர் எழுதிய கட்டுரையை விட இந்தக் கடிதம் அவருக்கு அதீதமாக செலவு வைக்கும்.

பாவம் நம் எழுத்தாளர்கள். எப்படி எல்லாம் தமிழ் வளர்க்க வேண்டி இருக்கிறது பாருங்கள்.

அன்புடன்

கி.பென்னேஸ்வரன்
18 அக்டோபர் 2010http://www.kpenneswaran.com/index.php?option=com_content&view=article&id=122:2010-10-18-17-43-59&catid=47:2010-09-16-10-13-46

13 comments:

 1. பாத்தீங்களா, ஒரு மனுஷன் இந்த தமிழ் நாட்டுல பிரபலமாவதற்கு என்னென்ன ஜாலவித்தைகள் செய்ய வேண்டியிருக்கு? உங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் உண்மையான திறமையைப் பாராட்ட மனம் வருவதில்லை என்பதற்கு இந்தப்பதிவே ஒரு சாட்சி. கேரளாவில் பாருங்கள். எழுத்தாளர்களை எப்படி தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்று. நான் பார்த்ததில்லை. இதுவும் அந்த எழுத்தச்சனே சென்னதுதான். தமிழன் திருந்த மாட்டான்?????!!!!!!!!

  ReplyDelete
 2. Adi pattaya kilappitteenga thala. Charu ithukkellam pathil sollama..gamnu iruppaar. athu thaan avar style.

  ReplyDelete
 3. மிகவும் நன்றாக உள்ளது.

  ReplyDelete
 4. "பேமானி.... உனக்கு இன்னா தில்லு இருந்தா நாப்பத்தி அஞ்சு வருஷமா தமிழ் இலக்கியத்துல கொலோச்சிகின்னு இருக்கற எங்க தல சாரு பத்தி பத்தி பத்தியா எழுதுவ. டாய்...." என்று ஏக வசனத்தில் குஞ்சான்களிடம் இருந்து உங்களுக்கு இன்னும் வசை ஏதும் வரவில்லையா?

  ReplyDelete
 5. @வலைவாசி
  ஹா..ஹா .. நீங்கள் முதலில் திட்டுகிறீர்கள் என்றே நினைத்தேன். எனக்கு தெரிந்து அவரது 'ஆதரவாளர்களை' விட எதிர்ப்பாளர்கள் தான் அதிகம் என்று நினைக்கிறேன். ஒரு மிரட்டல் கூட வரவில்லை :)

  ReplyDelete
 6. அன்பின் சந்திரா,
  இப்போதுதான் தகதிமிதாவின் அந்த கட்டுரை படித்தேன்.மிக மிக கேவலமான வார்த்தைகள் உபயோகப்படுத்தி எழுதியிருக்கிறார்.ஆனால் ஆச்சரியமில்லை. அவரிடமிருந்து நல்லதொரு படைப்போ, கட்டுரையோ,சிறுகதையோ,நாவலோ வந்தால்தானே ஆச்சரியம்.பயப்புள்ள மெண்டலாயி சட்டயக் கிழிச்சிக்கிட்டு திரியப்போற நாள் வெகு அருகில் இருக்கு. என்னா கேரள வைத்தியம்தேன் செய்யோனும்!!!ஜக்கம்மா காப்பத்து!!!

  ReplyDelete
 7. Ramanathan AnnamalaiOctober 21, 2010 at 1:29 PM

  can you pls give that link?

  ReplyDelete
 8. அன்புள்ள ராமநாதன்,
  முன்பே இந்த இணைப்பை கொடுத்திருக்க வேண்டும்..இப்போது என் பதிவிலும் அதை சேர்த்து விடுகிறேன்.
  http://charuonline.com/blog/?p=1089

  ReplyDelete
 9. அடுத்து அவர் எழுதும் நாவல், அவர் ஆண் விபச்சாரியாய் இருந்த காலம் பற்றியதாம் (?). டக்கென்று அந்த வியப்பு நிதானத்திற்கு வந்தது “லத்தீன் அமெரிக்காவிலும் ஒரு எழுத்தாளர் இதேபோல (?)ஆண் விபச்சாரியாக இருந்து தன் அனுபவங்களை எழுதியிருக்கிறாராம் (http://www.athishaonline.com/2010/10/blog-post_18.html) விஷயம் இதுதானா. சந்தோஷம், நான் சாரு நிவேதிதா இந்த கருவை ஒரிஜினல் என்று சொல்லி விடுவாரோ என்று நினைத்தேன்.

  கந்தமூர்த்தி

  ReplyDelete
 10. பென்னேஸ்வரன் என்று ஒரு இலக்கியவாதி இருப்பதே எனக்கு இப்போதுதான் தெரியும். சாருவை கலாய்தால் பேமஸ் ஆகி விடலாம் என்ற ட்ரிக்கை அவர் நன்றாக உபயோக படுத்தி உள்ளார் அவருக்கு சாஹித்ய அகாடமி அவார்டும் ஐம்பதாயிரம் ரொக்கமும் மற்றும் தமிழக அரசின் கலைமாமணி விருதும் கிடைக்க வாழ்த்துகிறேன். . .

  ReplyDelete
 11. என்னைப் போய் யாராவது இலக்கியவாதி என்றார்களா? சரியான காமெடியாக இருக்கிறதே. உள்ளுக்குள் சந்தோஷமாக இருப்பதையும் மறைக்க முடியவில்லை. எப்படியோ இலக்கியவாதி என்ற பட்டம், சாஹித்ய அகாடமி விருது (ஐம்பதாயிரம் இல்லை - இப்போது ஒரு லட்சம் - இப்படி அநியாயத்துக்குப் பாதியாய்க் குறைக்கிறார்களே) மற்றும் தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைக்க ஆசீர்வாதமும் பெரியவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு எந்த ஜென்மத்தில் பாக்கியம் செய்திருக்க வேண்டும். புல்லரிக்கிறது.

  அன்புடன்

  பென்னேஸ்வரன்

  ReplyDelete
 12. சாரு மாதிரியான பித்துக்குளிகளை இலக்கியவாதியாக கருதும் சில விடலைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை நம்பித்தான் இந்தப் பைத்தியம் என்னென்னமோ பேத்திக் கொண்டு திரிகிறார். இன்றைக்கு இலக்கிய உலகில் சகிக்க முடியாத.. கோரமானக் கொடுமையையே இவர்தான். இவரைப் போலவே இலக்கிய உலகில் வேஷம் போடும் இன்னும் சிலதுகளும் இருக்கிறது. எனக்கென்ன ஆச்சரியம் என்றால்... தங்கள் பைத்தியக் கூறு கொண்டவர்கள் என்று அதுகளுக்கு இன்னும் புரியாததுதான்?

  ReplyDelete