Tuesday, January 4, 2011

ஒலக நாயகனுக்கு ஒரு கேள்வி..


சினிமாவில் கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு மேல் இருக்கும் ஒருவர் இன்னும் சினிமா என்றால் என்னவென்றே புரிந்துகொள்ளவில்லை என்ற மாபெரும் உண்மையை நான் வைஷாலியில் உள்ள மகாகுண் பி.விஆரில் மன்மதன் அம்பு பார்க்கும்போது உறுதிப்படுத்திக்கொண்டேன். கமல் என்ற ஒரு மிக சாதாரண நடிகர் தன்னை பற்றி வைத்திருக்கும் அதீதமான நம்பிக்கை அதே சமயத்தில் ரசிகர்களை முட்டாள்கள் என்று பெருந்தன்மையுடன் கருதும் பேராண்மை ஆகிய முதல்களை வைத்தே இன்று வரை பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார் என்பதற்கு மிக சரியான உதாரணம் மேற்கூறிய படம். இந்த படத்தின் மூலங்களை பற்றி பலர் எழுதிவிட்டார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். கமலுக்கு சொந்தமாக மூளை கிடையாது; அமெரிக்க மூளைகளை 'எடுத்தாண்டு' வாழ்ந்துவருகிறார் என்பது சிறுவர்கள், சாரு நிவேதிதா முதல் நல்ல சினிமா தெரிந்த அனைவருக்கும் தெரிந்த உண்மை தான்.

படம் முதல் பத்து நிமிடங்களுக்கு சரியான பாதையில் போவதாக போக்கு காட்டிவிட்டு அதன் பிறகு கமலுக்கு தெரிந்த ஒரே வழியான குறுக்குப்பாதையில் பயணிக்க தொடங்கும்போது வந்த எரிச்சல் இருக்கிறதே. ச்சே. இவ்வளவு மோசமாகவா ஒரு 'ஒலக நாயகன்' படம் தருவான் என்ற முணுமுணுப்பு அரங்கில் இருந்த எட்டு பேரில் ஏழு பேரின் வாயிலிருந்து தானாக வந்தது.

கமல் மற்றும் என் மனம் கவர்ந்த வடிவேலுவின் கனவுக்கன்னி 'திரிசா' மற்றும் திறந்த வாயை மூட தெரியாத சங்கீதா நடித்த இது போன்ற படங்கள் நண்பர் சுரேஷ் கண்ணன் சொன்னது போல் கழக வாரிசுகளை திரையுலகில் மேற்கொண்டு பிரகாசிக்க விடக்கூடாது என்ற உள்குத்தோடு வெளியாகி இருக்கும் படங்களில் ஒன்று என்ற வகையில் மற்றெல்லாரையும் போலவே நானும் வரவேற்கும் ஒரு படம். துப்பறியும் நிபுணன் (முன்னாள் படை வீரன் வேறு!) என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கும் கமல் தன் புற்று நோய் நண்பனை காப்பாற்ற தியாகம் ஏதும் செய்யாமல் 'தகிடுதித்தம் ஆடி' பணக்கார மாதவனை பழி வாங்குகிறாராம். அதற்காக விக்ரம் காலத்திலிருந்து காப்பாற்றிவரும் தன் விதவைக்கோலத்தை 'முகமறியா கொலையாளியான' திரிசாவிடம் சொல்லி ஆறுதல் பெற்றால் கூட பரவாயில்லை. அவரையே 'பெற்றுக்கொண்டு' உண்மையிலேயே அப்பாவியான மாதவனுக்கு சங்கீதா என்ற பெருநங்கையை சேர்த்து வைக்கிறார். இதற்கு துணை போகும் கதா பாத்திரங்களாக மேற்படி வாழ்ந்து முடிந்திருக்கும் நடிகர்கள் தங்கள் முகத்தில் பூசப்பட்டிருக்கும் கமல் கரியை திரையரங்க இருட்டில் தெரிந்துகொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். நடுவில் களவாணி ஓவியா (தானே!) வேறு தலை காட்டுகிறார். இவ்வளவு கேவலமான படத்தை எப்படியெல்லாம் promote செய்து பிழைக்கிறார்கள்!

ஒலக நாயகனுக்கு ஒரே கேள்வி.. நீர் எப்போது ஒரு சினிமா (சொந்தமாக!) எடுக்க போகிறீர்?

5 comments:

  1. After somebody takes good movie
    he he he...

    -OSCAR Nayagan

    ReplyDelete
  2. பரவாயில்லை...படம் ஊத்திக்கிச்சு!

    ReplyDelete
  3. நீங்க சொன்னது அத்தனையும் உண்மை அந்தாளுக்கு உண்மையிலேயே சுடாம படம் எடுக்கவும் தெரியாது நடிக்கவும் தெரியாது..

    ReplyDelete
  4. Mr.prem kumar...
    நீ பெரிய நடிகனா? யாருடா நீ? கமல் பத்தி பேச உனக்கு என்னா தகுதி இருக்கு?
    மூடிட்டு போடா...

    ReplyDelete
  5. யாரது தம்பி கமல் மாதிரியே முகத்தை மறைத்து கொண்டு உணர்ச்சி வசப்படுவது..? அவர் சொல்லும் கருத்தில் மறுப்பு இருந்தால் தெளிவாக சொல்லுங்களேன்..

    ReplyDelete