Thursday, June 9, 2016

மவுனத்தின் மரணம்





நீண்ட பயணத்தில்
களைத்த பயணியென
தளர்வுற்றிருக்கிறது
மவுனம்.
கனத்தும்
எண்ணிலடங்காமல்
சிதறியும்
கிடக்கிறது
அது.
நாளை
ஒற்றைச்
சிறகென
அது
காற்றில்
மிதக்கலாம்
அல்லது
கைவிடப்பட்ட
தெருவாசியாகலாம்.

- ஜே.எஸ்.அனார்கலி
ஓவியம்: வெ.சந்திரமோகன்

No comments:

Post a Comment