Tuesday, January 31, 2012

எக்ஸைல்:ஒரு சந்திப்பு

கொலைவெறியை அடுத்து யூடியூபின் சென்சேஷன் விஷயமாக நான் கேவிப்பட்டது எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் புதிய நாவலான எக்சைளின் ட்ரைலர் தான். உண்மையில் அது ட்ரைலர் இல்லை. அவரது பதிப்பாளரும் சில நண்பர்களும் அவரும் சேர்ந்து நாவலைப் பற்றி பேசுகிறார்கள். அதை முன்னோட்டம் (preview) என்று தான் சொல்ல வேண்டும். (அதெல்லாம் பெரிய வார்த்தை அது ச்சும்மா விளம்பரம் மட்டுமே-குப்புறக்கோ )அது பெரிய விஷயமில்லை. நாவல் உலகின் மிகச் சிலரால் கையாளப்படும் Auto-fiction வகையை சார்ந்தது என்றும் உலகில் அந்த வகையறா எழுத்தாளர்களில் இரண்டாவது எழுத்தாளர் தான் தான் என்று முகத்தில் எந்த பெருமிதத்தையும் காட்டாமல் நாவலாசிரியர் சொல்கிறார்.
நாவலைப் படித்த பின் அந்த நாவலின் பிரதி(யின்)ஆசிரியரான உதயாவுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்தலாம் என்று எங்கள் நண்பர்கள் குழு முடிவெடுத்தது. நண்பர்கள் குழுவில் பல தரப்பட்ட நண்பர்கள் உண்டு என்றாலும் எங்களுக்கும் உதயாவுக்கும் பொதுவான விஷயம் மார்ட்டீன். அவருக்கு ரெமி.எங்களுக்கு மஸ்கிட்டோ காயில் என்பது தான் வேறுபாடு.

உதயா காதில் ரிக்கி மார்டீனுடனும் கையில் ரெமி மார்ட்டினுடனும் வந்தமர்ந்தார். தனியாக வரவில்லை. அவரது நண்பர்கள், வாசகர்கள், ஆதரவாளர்கள், அவர்பால் இரக்கம் கொண்டவர்கள், அவருக்காக எதையும் செய்ய துணியும் தற்கொலைப்படை என்று ஒரு ஐயாயிரம் பேர் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் நாங்கள் அமர்ந்திருந்த அறை போதாது என்பதால் அவர்கள் அனைவரையும் வெய்யில் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு உள்ளே வந்தார் உதயா.

நேர்காணல் தொடங்கியது.
பேட்டியாளர்: வணக்கம் உதயா.

உதயா : e'js trojkl' mn

பேட்டியாளர்: mms'sms'facebookb'orkut

உதயா: ??

பேட்டியாளர்: இது ஹீப்ரு. ஆங்கில எழுத்துகளுக்கு நடு நடுவே apostrophe போட எங்களுக்கும் தெரியும்.

உதயா: இது என் பிரெஞ்சு ஞானத்தை கிண்டல் செய்வது போல் இருக்கிறது. இதற்காக எத்தனை மொழியியல் அறிஞர்களிடம் பாடம் கற்றேன் என்பது எனக்கு தான் தெரியும். தமிழ் நாட்டில் எழுத்தாளனாக இருப்பது சாபம். அதற்கு பிரான்சில் பிச்சைக்காரனாக வாழலாம். இங்கு எல்லாமே கெட்டு விட்டது. தினம் ஒரு கற்பழிப்பு. போலிசாமியார்களின் காம விளையாட்டுகள்.பித்தலாட்டங்கள். மொரோக்காவில் அப்படி கிடையாது. அங்கு ஒரு பெண்ணை காமத்தோடு பார்த்தால் அவள் பக்கத்தில் இருக்கும் லாட்ஜுக்கு அழைத்து சென்று எல்லாம் செய்து (BJ உட்பட) பின் தனக்கு சபலம் ஏதுமில்லை என்று காண்பித்து நம்மை நாண செய்து விடுவாள். அவளது கணவன், சகோதரன் போன்றவர்கள் நம் மனம் திருந்தும்படி நம்மை அன்பான வார்த்தைகள் சொல்லி நல்வழிப்படுதுவார்கள். இங்கே அதெல்லாம் சாத்தியமா? இங்கே ஒரு கல்யாணமானப் பெண்ணை புணர ஆயிரம் தடைகள். அவளது கணவனுக்கு தெரியாமல் எத்தனை நாள் கள்ள உறவில்( இந்த வார்த்தையை இங்கே தடை செய்ய வேண்டும்) ஈடுபடுவது. இது மனதை சோர்ந்து விடச் செய்கிறது. மன உளைச்சளைத் தருகிறது. ஒருமுறை ஈபில் டவருக்கு சென்று வாருங்கள். மனைவியை புணரும் இளைஞர்களுக்கு அன்பளிப்பு தரும் பிரெஞ்சு கணவன்களைப் பார்க்கலாம். அது நாகரீகம். இங்கு எல்லாம் கெட்டு விட்டது. இங்கு யாருக்கும் காமத்தைக் கொண்டாடத் தெரியவில்லை. அதற்கெல்லாம் இந்தப் புத்தகத்தில் பதில் இருக்கிறது. நானே எழுதி இருக்கிறேன். ' இந்த புத்தகத்தை நாவலாகவும் படிக்கலாம். அல்லது காமத்தின் உச்சத்தை அடைவது எப்படி என்ற நூலாகவும் படிக்கலாம் என்று'.

(தொடர்ந்து பேசியதால் சற்று வறண்ட தொண்டையை சமாதானம் செய்ய ரெமி மார்டீனை பருகுகிறார்.எங்கள் குழுவில் லொள்ளு சபா மனோகர் போலவே தோற்றத்திலும் நடை உடை பாவனையிலும் இருக்கும் அசோகர் ஒரு இசை ரசிகன். அவன் கிடைத்த மௌனத்தை நிரப்ப எண்ணி அருகில் இருந்த சி.டி ப்ளேயரை ஆன் செய்ய அதில் இருந்து இது வரை கேட்டிராத நாரச இசை ஒலிக்கிறது.திடுமென்று நிமிர்ந்த உதயா 'இது ஹைபிஸ்கஸ் ரோசாசைனஸ் கம்போஸ் செய்த Cannis Familiaris. அட்டகாசமான பிரெஞ்சுப் பாடல் .' என்றபடி அதற்கேற்றாற்போல் 'ஜலஜா' நடனம் ஆடதுவங்குகிறார். அசோகருக்கு கிலி பிடித்துவிட்டது. தன் கோழிமுட்டைக் கண்களால் வெறித்து பார்த்தபடி திகைத்து நிற்கிறான்.எனக்கு விஷயம் புரிந்துவிட்டது. அது எப்போதோ சாந்தினி சவுக்கில் எலெக்ட்ரானிக் மார்க்கெட்டில் வாங்கிய சீனத் தயாரிப்பு ப்ளேயர். அசோகர் ஒரு எஸ்.ஏ.ராஜ்குமார் ரசிகன். அவன் தான் நேற்று இரவு முழுவதும் 'வானத்தைப் போல' பாடல்களை அலறவிட்டு எங்கள் ஏரியாக் காரர்களின் தூக்கத்தை காணமல் அடித்திருந்தான். இன்று அதில் கையை வைத்ததும் அது ரிவர்சில் பாடத்துவங்கி விட்டது. அதை ப்ரெஞ் என்று எண்ணி ஜலஜா ஆடும் உதயாவை எல்லோரும் பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்றாலும் அதை உணராமல் முழுக்க ஆடிக் களைத்த பின்பே அமர்ந்தார் உதயா)
பின்பு சொன்னார் 'இது தான் மக்களின் இசை. இது காதுக்குள் இறங்காமல் நேராக மனதுக்குள் இறங்கும் இசை. இது காமத்தின் உச்சம் எய்தும் பரவசத்துக்கு நிகரானது. இந்தப் பாடலை கேட்டவர்கள் அருகில் இருக்கும் பெண்ணுடன் உடலுறவு செய்து இருவரும் ஆர்கசம் அடைவார்கள். தமிழிலும் ஒரு இசை அமைப்பாளர் இருக்கிறார். இசையும் தெரியாது ஒன்றும் தெரியாது. ஆனாலும் தமிழர்கள் அவரது இசையைக் கேட்டு கெட்டழிகிறார்கள். நீங்கள் Artiodactyla Suidae பாடிய Hymenopetrous formicidae கேட்டிருக்கிறீர்களா?'

அறைக்குள் மயான அமைதி நிலவியது.

சற்று நேரம் நிலவிய அமைதியினூடே (!) அடுத்த கேள்வியை கேட்டோம். அசோகர் தான் கேட்டான்.

அசோகர்: அது இன்னாது அது autofiction ? ஆட்டோக்காரங்களோட கதையா? அப்பிடின்னாலும் அதை தமிழ்லே நீங்க தான் எழுதுநீங்கன்னு எப்டி சொல்லலாம்? நக்கீரன்லே ஒர்த்தர் ஏற்கனவே தன்னோட கதையை தானே எழுதுனாரு? கதையில வர்றவங்க பேரை எல்லாம் மாத்தி மாத்தி தானே அவரும் எழுதுனாரு. பேர் பொருத்தம் கூட இருக்கே. ஆட்டோ ஷங்கர் தானே அவரு பேரு. அப்போ உங்க முன்னோடி அவரு தானுங்களே?'

தான் கேட்ட கேள்வியால் தற்பெருமை அடைந்த அசோகர் எங்கள் எல்லோரையும் ஒருமுறை பார்த்து விட்டு புருவத்தை உயர்த்தி உதட்டைப்பிதுக்கி ரகசியமாய் உதயாவின் முகத்தை எங்களுக்கு காட்டிவிட்டு அமர்ந்து விட்டான்.

உதயா இன்னும் ஒரு மிடறு ரெமி மார்டீனை உள்ளே அனுப்பினார்.
பிறகு பேசினார். ' தமிழ் நாட்டில் என்ன செய்தாலும் கேள்வி கேட்கிறார்கள். நான் ஆட்டோ பிக்ஷன் என்று சொன்னால் நம்ப மறுக்கிறார்கள். கிண்டல் செய்கிறார்கள். இதையே ஒரு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளன் செய்தால் அவனுக்கு அங்கு ஒரு தீவையும் ஹெலிகாப்டரையும் பரிசாகத் தருகிறார்கள். கூடவே மல்லையா ஸ்டைலில் பழகிக்கொள்ள அழகான பெண்களையும் அனுப்புவார்கள். அவர்களிடம் ஒரு நாள் பழகினால் இது போன்ற நாலைந்து ஆட்டோ பிக்ஷன் நாவல்களை எழுதலாம். இங்கே நான் அவசரம் என்றாலும் ஆட்டோவில் தான் போக வேண்டி இருக்கிறது. (சென்னையில ஆட்டோவில போறவன் குபேரனா தான் இருப்பான்- குப்புறக்கோ) இல்லையென்றால் என் ஏழை மகன் கார்ப்பரேட் கம்பெனியில் கல்லுடைத்து சம்பாதித்த ஆடி காரில் தான் போக வேண்டும். அதற்கும் சரியான சாரதிகள் கிடைப்பதில்லை. ஒரு சாரதி ராத்திரி பனிரெண்டு மணிக்கு தான் வேலைக்கு வருவார். அதிகாலை பனிரெண்டு மணிக்கே கிளம்பி விடுவார். அவருக்கு பத்னைந்தாயிரம் சம்பளம். ஒரு ஏழை எழுத்தாளனுக்கு இதெல்லாம் கட்டுபடியாகுமா?

-தொடரும்

4 comments:

 1. புத்தகத் திருவிழா வேலைகளுக்கு இடையே இன்று அதிசயமாக ஏழரை மணிக்கே வீடு வந்து கனரா வங்கி சைட்டுக்குப் போக சி அடித்ததும் உங்கள் பெயர் வந்தது. சரி ரொம்ப நாளேச்சே என்று நுழைந்தேன். சந்தேகமே இல்லாமல் நீங்கள் அடுத்த ஆடோபிக்‍ஷன் எழுத்தாளர் ஆகலாம். அதுவும் நீங்களும் தில்லியில் இருந்தீர்கள் என்பது இன்னொரு சிறப்பு. நீங்கள் இங்கே சுஜாதாவுடன் பேசினீர்கள், லாசராவுடன் விவாதித்தீர்கள், ரங்கராஜனுடன் மொழியாக்கம் பற்றி பேசினீர்கள் என்று என்னென்ன புருடா விட்டாலும் தமிழ்நாட்டில் தட்டிக்கேட்பவர்கள் மிகக்கொஞ்சம்தான். அப்படியே தட்டிக்கேட்ட வந்தாலும் உங்கள் ரசிகர் பட்டாளத்தை ஏவிவிட்டு எங்கள் தலைவனை தட்டிக்கேட்டவன் யாரடா என்று ஆயிரம் பின்னூட்டங்களை போட வைத்து விடலாம். அருமை. அங்கதம் கைவருகிறது. தொடருங்கள். நீங்கள் எழுதியதுதானா என்று சிறு சந்தேகம் வருகிறது - அது எப்படி ராஜா பெயர் எங்கேயும் வராமல்...
  ஷாஜஹான்

  ReplyDelete
 2. மிக்க நன்றி ஷாஜஹான் ஸார்.

  ReplyDelete
 3. வாழ்த்துகள். பாராட்டுகள்
  தொடர்ந்து எழுதுங்கள்.

  மு.இளங்கோவன்
  புதுச்சேரி,இந்தியா

  பார்க்கவும்
  http://muelangovan.blogspot.in/

  ReplyDelete
 4. பாஸ் என்ன இரண்டாம் பாகத்தை எழுதவில்லையா?இப்போதுதான் இதை படித்தேன் எஸ் ஏ ராஜ்குமார் பாடல் ரிவெர்சில் ஹா ஹா ஹா

  ReplyDelete