Friday, July 16, 2010

ஓவியமும் நானும்...

சிறு வயதிலிருந்தே ஓவியம் மீது ஆர்வம் ஏற்பட என்ன காரணம் என்று சரியாக சொல்ல முடியவில்லை. பாட புத்தகங்களில் வரும் வண்ண ஓவியங்களில் மனதை பறிகொடுக்க ஆரம்பித்து, வணிக பத்திரிக்கைகளில் வரும் ஓவியங்கள், என்றென்றைக்கும் மறக்க முடியாத ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ் போன்ற சித்திரக்கதை புத்தகங்களில் வரும் ஓவியங்களில் மூழ்கினேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நானும் வரைய ஆரம்பித்தேன். பள்ளி நாட்களில் ஓவியத்துக்காக பரிசுகள் வாங்கியதுண்டு.

கல்லூரி நாட்களில் எந்த பயிற்சியும் இல்லாமல் ஓவியத்தின் மீதிருந்த ஆர்வம் ஒன்றை மட்டும் கொண்டு வரைய ஆரம்பித்தேன். புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த 'மலர்' பத்திரிக்கையில் என் ஓவியங்கள் வெளியாகின. பின்பு தீவிர இலக்கியத்தை எனக்கு அறிமுகம் செய்த மங்களேஸ்வரன், தனிக்கொடி, ராசி. பன்னீர்செல்வன் ஆகியோர் இணைந்து நடத்திய 'கவித்வா' எனும் பனிரெண்டே பக்கங்கள் கொண்ட கவிதைக்கான சிற்றிதழில் வரைய ஆரம்பித்த போது நவீன ஓவியம் மீது ஆர்வம் ஏற்பட்டது. இரண்டாண்டுகள் வந்த கவித்வா பரவலான கவனம் பெற்றது. அது நின்று விட்ட பிறகு, வாழ்க்கையின் ஓட்டத்தில் பின்பு ஓவியம் வரைய சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. வாசிப்பை மட்டும் விடவில்லை.

2005 இல் டெல்லி வந்த புதிதில் திரு.ஷாஜஹான் இலவசமாக நடத்திக்கொண்டிருந்த 'தலைநகர தமிழோசை' இதழில் வரைய வாய்ப்பு கொடுத்தார்.

டெல்லியில் நவீன நாடகங்களின் முகவரியாய் இருக்கும் திரு. யதார்த்தா பென்னேஸ்வரன் ஆரம்பித்த 'வடக்கு வாசல்' தான் என் அடையாளம். பிரபல எழுத்தாளர்களில் இருந்து புதிதாய் எழுத வரும் எழுத்தாளர்கள் வரை நிறைய பேரின் படைப்புகளை படித்து விட்டு அதற்கேற்ப ஓவியங்கள் வரைவது மிகவும் பிடித்திருக்கிறது. பென்னேஸ்வரன் அவர்கள் தரும் உற்சாகமும், படைப்பை எழுதியவர்களின் பாராட்டும் என்னை உற்சாகப்படுத்தின. ஒவ்வொரு முறை ஓவியங்களை அனுப்பும்போதும் பென்னேஸ்வரன் அவர்கள் எழுதும் பதில் இன்னும் வரைய தூண்டும். அவரை பற்றி நிறைய எழுதலாம். க.நா.சு முதல் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் வரை அவரை அறியாத எழுத்தாளர்கள் யாரும் இல்லை. வடக்குவாசலில் ஒரு அங்கமாக இருப்பதை என் பேறாக நினைக்கிறேன்.

பிறகு உயிர்மையில் வரைய ஆரம்பித்தேன். பிரபஞ்சன் தொடங்கி எஸ். ராமகிருஷ்ணன் போன்ற சிறந்த எழுத்தாளர்களின் கதை, கட்டுரைகளுக்கு வரைவதில் உண்மையில் ஒரு பெருமிதம் உண்டு. முக்கியமாக இலங்கையிலிருந்து எழுதும் நண்பர் தீபசெல்வனின் கட்டுரைக்கு வரைந்த ஓவியங்களுக்கு அவர் தந்த பாராட்டு மறக்க முடியாதது. தனது blog இல் அந்த ஓவியங்களை அவர் பயன்படுத்தி கொண்டார். நானும் என் தோழி அனார்கலியும் நடத்தும் blog இன் முகப்பில் இருக்கும் படம் வடக்குவாசலில் தீப செல்வன் எழுதிய 'புகைப்படத்தில் கொல்லப்பட்ட எனது சகோதரன்' என்ற கவிதைக்காக வரைந்தது. தன் இறந்த சகோதரனை நினைவுபடுத்துவதாக சொன்னார் தீபன்.

மனுஷ்யபுத்திரன் என் ஓவியங்கள் பெற்றவுடன் அவற்றை பாராட்டி சொல்லும் வார்த்தைகள் சந்தோஷம் தருபவை.

நண்பர் சேதுபதி அருணாசலம் தந்த உற்சாகத்தில் சொல்வனத்திலும் சில படைப்புகளுக்கு வரைந்தேன். எனது படைப்புகளை படித்து உற்சாக படுத்தும் சேதுபதி சொல்வனத்தில் என் விமர்சன கட்டுரை ஒன்றை பிரசுரித்தார். தொடர்ந்து எழுதவும் வரையவும் சொல்லி ஊக்கம் தரும் அவர் போன்றவர்களுக்கு என் நன்றிகள். அவ்வப்போது என் ஓவியங்களை பார்த்து சரியான விமர்சனம் சொல்லும் என் பெருமதிப்புக்குரிய ஓவியர், எழுத்தாளர், விமர்சகர் என்று பல்வேறு முகங்கள் கொண்ட ஜீவானந்தம் அவர்களுக்கும் நன்றி.

வடக்குவாசல், உயிர்மை ஆகிய பத்திரிக்கைகளில் வெளியான எனது சில ஓவியங்கள் கீழே.

-------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------

19 comments:

 1. மிக்க நன்றி ஹரன்..
  நலமா?

  ReplyDelete
 2. ஒவியங்கள் "அதகளம்" !

  பகிர்தலுக்கு நன்றி.

  ஹார்ட்டா

  ReplyDelete
 3. fab sketches chandra mohan
  Shaji

  ReplyDelete
 4. அன்புள்ள சந்திரமோகன்,

  நீங்கள் 'வடக்கு வாசலி'ல் ஓவியம் வரைவது தெரியும். விடாமல் பார்ப்பதும் உண்டு. 'உயிர்மை'யில் சித்திரம் வரைவது பற்றி இப்போதுதான் தெரிந்தது. இந்த எண்ணிக்கை மென்மேலும் பெருக மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

  நன்றி!

  சினிமா விரும்பி

  ReplyDelete
 5. உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்..
  மிக்க நன்றி சினிமா விரும்பி ஸார்..!

  ReplyDelete
 6. அருமையான ஓவியங்கள் நண்பரே.. தொடர்ந்து இயங்குங்கள்.’மதராசப்பட்டிணம்’ அங்கு வெளியாகிவிட்டதா? உங்க விமர்சனம் படிக்க ஆசை.

  ReplyDelete
 7. மிக அற்புத ஓவியங்கள்.
  என் அடுத்த புத்தக முகப்பட்டை ஓவியம் நீங்கள்தான் தீட்ட வேண்டும் சந்திர மோகன்..

  ReplyDelete
 8. @மயில்ராவணன்

  'மதராசப்பட்டினம்' இங்கு இன்னும் வரவில்லை..
  மயில்ராவணன்.
  வந்தவுடன் அதற்கு விமர்சனம் எழுதுவேன்.
  மிக்க நன்றி.

  @ எம்.ஏ.சுசீலா

  நிச்சயம் அம்மா.
  உங்கள் புத்தகத்துக்கு முகப்போவியம் வரைவது என் பாக்கியம்.

  ReplyDelete
 9. Chandru...
  I have seen your sketches when you started with Shahjahan's 'Thalainagara Thamizhosai'. Nice to see some more. Keep up the good work!

  Arivu, Muscat

  ReplyDelete
 10. Chandru,

  'Madhrasapattinam' got released in Muscat on Wednesay. I have seen the movie. I want to read your review once you see it.

  Take care
  Bye
  Arivu, Muscat

  ReplyDelete
 11. எப்படி இருக்கிறீர்கள் அறிவழகன்?
  உங்கள் கருத்துக்கு நன்றி. 'தலைநகர தமிழோசை' யில் வரைந்தது நல்ல அனுபவம்.

  'மதராசப்பட்டினம்' ஸ்டில் எல்லாம் பார்த்தால் தமிழ் நாட்டுக்கான உடை போல் தெரியவில்லை, ஆர்யா அணிந்திருப்பவை.
  படம் பார்த்தால் தெரியும்..என்ன செய்திருக்கிறார்கள் என்று..

  ReplyDelete
 12. Sketches are good. Better u try in color also..

  ReplyDelete
 13. I've seen ur sketches in uyirmai.
  But didn't know it's u.
  -Bharath

  ReplyDelete
 14. அன்பு சந்திரமோகன்,

  ரொம்ப அருமையான ஓவியங்கள்... நானும் இது போல முயன்றிருக்கிறேன்... ரொம்பவும் நேர்த்தி... அடர்த்தியும் கூட... நீங்க தான் அந்த சந்திரமோகன் என்பது இப்போதே எனக்கு பாடம்.

  அன்புடன்
  ராகவன்

  ReplyDelete
 15. மிக்க நன்றி ராகவன்..உங்கள் வார்த்தைகள் மிகுந்த ஊக்கமும் மகிழ்ச்சியும் தருகின்றன.

  ReplyDelete