Thursday, September 6, 2012

பொன்வசந்தம் நிஜமா?

தொன்னுத்தி ரெண்டில் சிம்பனி செய்ய ராஜா வேட்டி குர்தா அங்க வஸ்திரங்களுடன்  லண்டன் சென்றிருந்த  நாட்களுக்கும் நீதானே என் பொன்வசந்தம் ரெக்கார்டிங்குக்காக கருப்பு கோட்டெல்லாம் போட்டு  சென்றிருந்த நாட்களுக்கும் இடையில் சுமார் இருபதாண்டுகள் ஓட்டம் இருக்கிறது. இந்தக் கால இடைவெளியில் ரஹ்மான் நுழைந்து வளர்ந்து அமைத்த ராஜ்ஜியம் கூட முடிந்து யுவன்ஷங்கர், ஹாரிஸ் காலம் கூட பழசாகி ஜி .வி.பிரகாஷ்குமார், சந்தோஷ் நாயணன் வரைக்கும் வந்து விட்டது.

திரைத்துறையில் ஒரு காலத்தில் ராஜா ராஜா என்று அலைந்து திரிந்த  பாலா, தங்கர்பச்சான் கும்பல் கூட அவரை விட்டு விட்டு வேறு இசையமைப்பாளர்கள் பக்கம் போய் விட்ட நிலையில், ஹாரிஸ் - ரஹ்மான் கூட்டணிகளில்  ஹைடெக் இசைக் காவியங்கள் தந்த கவுதம் மேனன் ராஜாவை வைத்து படம் பண்ணப் போவதாக வந்த செய்திகளே ஆச்சர்யப்படுத்தின. ஒரு இயக்குனராக சில நவீன தொழில்நுட்பங்களை தமிழுக்கு கொண்டு வந்தவர் என்பதைத் தாண்டி அவர் மீது பெரிய கலை மதிப்பீடு எவருக்கும் இல்லை என்றாலும் இந்த புதுக் கூட்டணி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது உண்மை.

நாளுக்கொரு செய்தி. சமூக வலைத் தளங்களில் டீசர் என்ற பெயரில் மைக்ரோ செகண்டுகளில் இசைத் துண்டுகள் என்று படத்தின் இசை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்ததில் கவுதம் மேனனுக்கு நிச்சயம் வெற்றி தான். பாடல் வெளியீட்டிலும் கூட ஹங்கேரி இசைக் குழுவை இறக்குமதி செய்து மூத்த இயக்குனர்களை வைத்து ராஜாவுக்கு பெரிய மரியாதையும் செய்தார். மகிழ்ச்சி.

என்ன சொல்லி விற்றாலும் ப்ராடக்ட் எப்படி இருக்கிறது என்று யூசர் பார்ப்பானே! நான் இசை தெரியாத எண்டு யூசர் என்பதால் பாடல்களைப் பற்றி ஒரு சினிமா இசை ரசிகனாகவே என் கருத்தை சொல்கிறேன்.ராஜா ரசிகர்களைப் பொறுத்தவரை அவரது பொற்கால இசையை நவீனத் தொழில்நுட்பங்களுடன் தந்திருப்பார் அல்லது இதுவரை அவரிடமிருந்து கேட்டிராத புது வகை பொழியும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்கள். நானும் அப்படியே.

கேட்டவுடன் பிடிப்பவை என்றால் காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன் பாடலும், முதல் முறை பார்த்த ஞாபகம் பாடலும் தான். யுவனுக்கு ரெண்டு பாடல் கொடுத்ததன் மூலம் இந்திய வாரிசு அரசியல்வாதிகள் சினிமாக்காரர்களின் கெட்ட லிஸ்டில் ராஜாவும் சேர்ந்து விட்டாரே என்ற வருத்தம் தான் வந்தது . யுவனுக்கெல்லாம் பாடவே வராது என்பது யுனிவெர்சல் ட்ரூத். மாபெரும் இசைக் கலைஞனான ராஜாவுக்கு அது தெரியவே இல்லையா என்ன? என்ன மோசமான பாடும் முறை யுவனிடம்.. கொஞ்சம் செருமி விட்டு நோட்சைப் பார்த்து பாடு என்று ராஜா அவரை சொல்லவே இல்லையா? அருமையான பாடகரான கார்திக்குக்கே எல்லா பாடலையும் தந்திருக்கலாம். என்றாலும் பெரிய மாற்றம் இருந்திருக்காது தான். முழுக்க முழுக்க மேற்கத்திய முறைப்படி இசை தந்திருந்தாலும் இசையில் சுவாரஸ்யம் ரொம்பக் கம்மி. மலையாளப் படமான குரு மற்றும் நாசரின் தேவதை பாடல்களின் சாயல் நிறையவே தெரிகிறது. இதே இசைக் கருவிகளை வைத்து தான் இளம்பனி துளி விழும் நேரம், புத்தம் புது காலை முதல் ஒரு பூங்காவனம் என்று புதுமைகளின் குவியலைக் கொட்டி நம் காதுகளுக்கு இசை இனிப்புகளை ஊட்டினார் ராஜா..இதிலோ...என்ன சொல்ல?

ராஜாவிடம் தற்போது இருக்கும் மிகப் பெரிய குறை நல்ல பாடலாசிரியர் இல்லாதது தான். நா. முத்துக்குமார் கொஞ்சம் கவித்துவமாக யோசித்து எழுதி இருந்தாலும் 'தம்பி சிம்பிளா குடு..என்னைய மாதிரி பாமரனுக்கும் புரியணும்' என்று தடுத்திருப்பாரோ ராஜா? கண்கள் உள்ள காரணம்....உன்னைப் பார்க்கத் தானே என்று கேட்டுப் புளித்த வரிகள் வேறு. புடிக்கல மாமு ..நெஜமாவே புடிக்கல மாமு. அப்படி ஒரு பாடலை ஏன் வைக்க வேண்டும் என்று தெரியவில்லை.

ஒரு வேளை படத்துடன் பார்த்தால் பிடிக்குமோ என்று கூட தோன்றுகிறது.. இன்னும் பல முறை கேட்டால் ஒரு வேளை பிடிக்கலாமோ என்று சுரேஷ்கண்ணன் போலவே நானும் யோசிக்கிறேன். ஒன்றுமே இல்லை..ஜப்பானில் கல்யாண ராமனில் 'சின்னப் பூ சின்னப் பூ' என்றொரு பாடல் இருக்கிறது. அதன் முகப்பு இசையை ஒரு முறை கேளுங்கள். அந்த வசந்தம் இனி வருமா என்றிருக்கிறது.

ராஜா..... நீங்கள் தான் எங்கள் பொன் வசந்தம்!!! உங்களுக்கு அது தெரியும் தானே?

9 comments:

  1. ஒரு வேலை 'டச்' விட்டு போச்சோ....? சில பாடல்கள் நீங்கள் கூறியது போல் படக்காட்சியுடன் கேட்டால் பிடிக்கும் என்று நினைக்கிறேன்... வரட்டும்... பார்க்கலாம்... கேட்கலாம்...

    ReplyDelete
  2. வணக்கம் சந்திரமோகன்; சொல்வதற்கு உண்மையிலேயே ஒன்றும் இல்லை. நான் உட்பட பலர் இந்த இசையை ஒரு மைல் கல்லாக, புத்தம் புதிய ஒரு ராஜாவை கண்டதாக கொண்டாடி வருகிறோம் என்பதை உங்கள் மீதன் அன்பின் காரணமாக தகவலாக சொல்கிறேன். பல கவிதைகள், இலக்கியவகைகள் நமக்கு புரியாமல் பிடிபடாமல் இருப்பதற்கு காரணம் நமக்கு தெரிந்த நம்மை அதில் காண விரும்புவதுதான். என்ன தெரிகிறது என்று பார்காமல், அவசரப்படாமல் பொறுமையாக அறிய முயன்றால் ஏதேனும் கிட்டலாம். சில மரபான ராஜா ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதை அறியும்போதே ராஜா தான் உருவாக்கிய சட்டகத்தை தொடர்ந்து உடைத்துக் கொண்டிருப்பது புரிகிறது.

    புது புது கற்பனைகளை செய்து, ஏமாற்றத்தை தனக்கு தானே மறைக்க இதையெல்லாம் சொல்கிறேன் என்று நினைத்தால்... வாழ்த்துக்கள்! அடுத்த 5 வருடத்திற்குள்ளாவது இந்த இசைக்கு நீங்கள் பழக்கப்பட்டு உங்கள் பழைய கருத்தை மறுமரீசீலனை செய்யும் பக்குவம் உங்களுக்கு ஏற்பட வாய்பில்லாமல் போய்விடப்போகிறது! ஆனால் பாட்டு மிகவும் மனதிற்கு நெருக்கமாகும் கட்டத்தில் காட்சிதான் அதற்கு காரணம் என்று அநியாயமாக சொல்லாதீர்கள்.

    ReplyDelete
  3. வணக்கம் சந்திரமோகன்; சொல்வதற்கு உண்மையிலேயே ஒன்றும் இல்லை. நான் உட்பட பலர் இந்த இசையை ஒரு மைல் கல்லாக, புத்தம் புதிய ஒரு ராஜாவை கண்டதாக கொண்டாடி வருகிறோம் என்பதை உங்கள் மீதன் அன்பின் காரணமாக தகவலாக சொல்கிறேன். பல கவிதைகள், இலக்கியவகைகள் நமக்கு புரியாமல் பிடிபடாமல் இருப்பதற்கு காரணம் நமக்கு தெரிந்த நம்மை அதில் காண விரும்புவதுதான். என்ன தெரிகிறது என்று பார்காமல், அவசரப்படாமல் பொறுமையாக அறிய முயன்றால் ஏதேனும் கிட்டலாம். சில மரபான ராஜா ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதை அறியும்போதே ராஜா தான் உருவாக்கிய சட்டகத்தை தொடர்ந்து உடைத்துக் கொண்டிருப்பது புரிகிறது.

    புது புது கற்பனைகளை செய்து, ஏமாற்றத்தை தனக்கு தானே மறைக்க இதையெல்லாம் சொல்கிறேன் என்று நினைத்தால்... வாழ்த்துக்கள்! அடுத்த 5 வருடத்திற்குள்ளாவது இந்த இசைக்கு நீங்கள் பழக்கப்பட்டு உங்கள் பழைய கருத்தை மறுமரீசீலனை செய்யும் பக்குவம் உங்களுக்கு ஏற்பட வாய்பில்லாமல் போய்விடப்போகிறது! ஆனால் பாட்டு மிகவும் மனதிற்கு நெருக்கமாகும் கட்டத்தில் காட்சிதான் அதற்கு காரணம் என்று அநியாயமாக சொல்லாதீர்கள்.

    ReplyDelete
  4. hahahahahahhahhahhahahahah. laughable. not ilayarjas music . your comments! listen to the songs again. end user has already lapped it up and cds have been sold out. and the yuvans choice was gautham menon"s not rajs"s as told by menon himself. so be fair with facts when criticizing! the trouble with approaching something new with expectations is this. u will end up disappointed.

    ReplyDelete
  5. /வாய்பில்லாமல் போய்விடப்போகிறது! / 'வாய்பில்லாமலா போய்விடப்போகிறது' என்று சொல்ல வந்தது இப்படி வந்துவிட்டது. இன்னொன்று யுவனை விட சிறப்பாக அந்த 2 பாடல்களை பாடும் வாய்ப்புகள் உண்டு என்றாலும், நமக்கு தெரிந்த யாரும் அதை செய்யமுடியும் என்று தோன்றவில்லை.உதாரணமாக எஸ்பிபி, கார்த்திக், ஹரிஹரன், ஜேசுதாஸ், ஶ்ரீனிவாஸ்.. யாரும் யுவன் கொண்டு வந்த உணர்வு வெளியை கொண்டுவரமுடியாது என்பதே என் கருத்து.

    ReplyDelete
  6. \\இந்திய வாரிசு அரசியல்வாதிகள் சினிமாக்காரர்களின் கெட்ட லிஸ்டில் ராஜாவும் சேர்ந்து விட்டாரே என்ற வருத்தம் தான் வந்தது.\\

    இந்த வீடியோ லிங்கை பாருங்கள்..யார் யுவனின் குரல் வேண்டுமுன்னு கேட்டது என்பது புரியும். சில மேடை விழாக்களில் அவரே யுவனின் குரலை கிண்டல் செய்திருப்பார்.
    http://www.techsatish.net/2012/08/ilayaraja-gautam-menon-interview.html

    \\தம்பி சிம்பிளா குடு..என்னைய மாதிரி பாமரனுக்கும் புரியணும்' என்று தடுத்திருப்பாரோ ராஜா?\\

    உங்க எதிர்பார்ப்பு சரியாக வரவில்லை என்றவுடன் போட்டு தாக்கு தாக்குன்னு தாக்கிட்டிங்க ;-)))

    ReplyDelete
  7. (சேர்க்கவும் )
    நாளுக்கொரு செய்தி, பொழுதொரு வண்ணம் சமூக வலைத் தளங்களில் டீசர்....

    எங்களை உன் இசை என்ற இன்ப வெள்ளத்தில் நீந்த வந்த எங்களை எமத்ரதே இராஜா ......

    ReplyDelete
  8. Still i cannot control my laugh :)
    please post more reviews.Atleast everyday.
    you have so much humour in you.
    please read p.g.woodhouse.this will help to increase humour in your
    writing skills.

    ReplyDelete
  9. அன்புள்ள சந்திரமோகன்,

    என்னைப் போலவே நீங்களும் இசை ஞானியின் பரம ரசிகர் என்பதை நான் அறிவேன். ராஜாவின் மீது உங்களுக்கு இருக்கும் அபிமானம் தூள் தூளாக வேண்டுமென்றால் இரண்டு வாரமாகக் குமுதத்தில் அவர் எழுதி வரும் கேள்வி பதில்களைப் படிக்கவும்! புதுப் பாட்டெல்லாம் எதுவும் கேட்க வேண்டிய அவசியமில்லை!

    நன்றி!

    சினிமா விரும்பி

    http://cinemavirumbi.blogspot.in

    ReplyDelete