தமிழ்ப் படங்களில் அபத்தங்கள் ஆரம்ப காலத்திலிருந்தே அதிகம் என்பதற்கு
யதேச்சையாக சில தினங்களுக்கு முன் டி.வியில் கண்ட திரைக்காட்சிகள் உதாரணம்.
ஒரு எம்ஜியார் படம். நம்பியார் தலைமையில் ஆறேழு பேர் துப்பாக்கிகளை
வைத்துக்கொண்டு ஒருவனைத் துரத்துகிறார்கள். எதிர்த்தாற்போல் எம்ஜியார்.
வந்தவர்கள் அத்தனை துப்பாக்கிகளையும் விட்டு விட்டு கத்தியால் அந்த மனிதன்
முதுகில் குத்துகிறார்கள். அவன் கையில் இருக்கும் ரகசியங்கள் அடங்கிய
பெட்டியை பறிக்குமுன் எம்ஜியார் சின்னூண்டு ரிவால்வரை உயர்த்தி வானத்தை
நோக்கி சுடுகிறார். வில்லன் கூட்டம் துண்டக்காணோம் துணியக் காணோம் என்று
ஓடிவிடுகிறது. இத்தனைக்கும் அனைவரிடமும் இருக்கும் துப்பாக்கி அவர்களை விட
உயரம். என்னடா இது கொடுமை என்று சேனலை திருப்பினால் அர்ஜுன் நடித்த தாயம்
ஒண்ணு படம். அவ்வளவு செலவு பண்ணி துப்பாக்கிகள், ஹீரோயின்கள், அவர்கள்
அழகிய உடல்கள் மேல் சூட்கேஸ் துணிகளால் தைக்கப்பட்ட போராளிச் சீருடைகள்,
கப்பல்கள்,கடல்கள்...என்று தயாரிப்பாளர் கந்து வட்டிக்கு கடன்வாங்கிக்
கொடுத்தக் காசில் படமெடுத்துப் பழகி இருக்கிறார்கள் போலும். ஆக்ஷன் கிங்
அர்ஜுன் கப்பலில் பயணிக்க ஏதோ சோகத்தில் ஒரு பாட்டுப்பாட (மனதிலே ஒரு
பாட்டு- என்ன மென்மையான பாடல்!) கப்பலின் வேறொரு தளத்தில் சாத்தப்பட்ட
வேறொரு அறையில் இருந்து சுசிலா குரலில் எட்டு வயசுக் குட்டிப்பெண் ஒன்று
பதிலுக்குப் பாட...தேடி வந்தக் குழந்தை கிடைத்து விட்டது என்று அர்ஜுன் போக
அங்கே வில்லன் என்ட்ரி. யாரடா அது என்று பார்த்தால் லிவிங்க்ஸ்டன். ஸ்நேக்
பாபு வடிவேலு ஹேர் ஸ்டைலில் அவரைப் பார்க்கவே சிரிப்பு தாளவில்லை.
தடார்புடாரென்று சண்டை. கடைசியில் போலீஸ் வந்து ரெண்டு ரவுண்டு
லிவிங்க்ஸ்டன் நெஞ்சைபார்த்து சுட குங்குமம் கலந்த தண்ணீர் பீய்ச்சியடித்து
லிவிங்க்ஸ்டன் சரிகிறார். இடையில் குழந்தையைக் காப்பாற்ற ஓடி வரும்
மாதுரி உடலில் பல குண்டுகளை செலுத்தி விடுகிறார் லிவிங்க்ஸ்டன் ("எங்க
பாதர் மாதர் எல்லாமே அங்க தானே லிவிங்க்ஸ்டன்" - ஸ்டீவ் வாவ் வடிவேலு!)
அட முடிந்து விட்டதே என்று பார்த்தால் திடீரென்று குண்டடிப்பட்ட லிவிங்க்ஸ்டன் எதிரே துப்பாக்கியுடன். பின்னர் அவர் என்ன நினைத்தாரோ தானே நெஞ்சைப் பிடித்துக் கீழே விழுந்து செத்துப் போகிறார். திரும்பவும் மனதிலே ஒரு பாட்டு. எனக்கென்னவோ அதற்க்கப்புறம் இளையராஜா அர்ஜுன் படங்களுக்கு இசை அமைக்காததற்கு தாயம் ஒண்ணு தான் காரணம் என்று தோன்றுகிறது.
அட முடிந்து விட்டதே என்று பார்த்தால் திடீரென்று குண்டடிப்பட்ட லிவிங்க்ஸ்டன் எதிரே துப்பாக்கியுடன். பின்னர் அவர் என்ன நினைத்தாரோ தானே நெஞ்சைப் பிடித்துக் கீழே விழுந்து செத்துப் போகிறார். திரும்பவும் மனதிலே ஒரு பாட்டு. எனக்கென்னவோ அதற்க்கப்புறம் இளையராஜா அர்ஜுன் படங்களுக்கு இசை அமைக்காததற்கு தாயம் ஒண்ணு தான் காரணம் என்று தோன்றுகிறது.
அது சரி...
ReplyDeleteதாயம் ஒண்ணு நல்ல வேளை நான் பார்க்கல! இந்த மாதிரி காவிய படங்கள் தமிழ்ல நிறைய இருக்கு சந்துரு...
ReplyDeleteஹா... ஹா... ரசித்தேன் சார்...
ReplyDelete(இப்ப தான் பார்த்தீர்களா...)
ஹி ஹி ஹி ...
ReplyDeleteஐந்து திறமைகள் கொண்டவர் வேண்டும் என்று ஐந்து ஹீரோயின்களை லவ் பண்ணுவார். :-))))))
ReplyDelete