Saturday, July 31, 2010

மீண்டும் சாரு..



தமிழ் இணைய கட்டுரைகளை வாசித்து விட்டு தூங்க செல்வது இன்றைய வாசர்களின் அன்றாட 'பணியாகி 'விட்டது.இணைய உலகில் தவிர்க்க முடியாத இரு எழுத்தாளர்களான ஜெயமோகனையும், சாரு நிவேதிதாவையும் கிட்டத்தட்ட அனைத்து வாசகர்களும் வாசிக்கிறார்கள் என்று சொல்லலாம். சீரியசான விஷயங்களுக்கு ஜெ.வும் மனம் விட்டு சிரிக்க வடிவேலுவும், சாரு நிவேதிதாவும் என் சாய்ஸ். அதற்காக ஜெ. எழுதும் அனைத்திலும் உடன்பாடு உண்டு என்று சொல்ல முடியாது. ஜாதி துவேஷத்தை ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதன் மூலம் கடந்து விடலாம் என்றெல்லாம் அவர் எழுதுவதில் எனக்கு கடுமையான முரண்பாடு உண்டு. அவர் சொல்லும் கருத்துக்கு உடன்படவில்லை என்றால் 'பயிற்சி' இல்லாதவர்கள் என்றொரு பழிச்சொல்லுக்கு ஆளாகவும் நேரும்.
காந்தியை அவர் கடவுள் ரேஞ்சுக்கு எழுதுவதெல்லாம் கண்டிப்பாக விமர்சனத்துக்கு உரியவை. ஆனால் அவரிடம் நம்மால் விவாதம் செய்ய முடியும். நாம் சொல்லும் கருத்துக்கோ அல்லது கேள்விக்கோ அவர் மதிப்பளித்து விளக்கம் தருவது போல் சாரு செய்வதில்லை. அவர் தளத்தில் பின்னூட்டம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஆனாலும் என் மனம் சற்று தளர்வடைந்தால் நான் செல்வது சாருவின் தளத்துக்கு தான். தன்னை பற்றியும் தான் படைப்புகளை(!) பற்றியும் அவர் எழுதும் ஒவ்வொரு கட்டுரையும் வடிவேலுவின் காமெடியை மிஞ்சி விடும். படிப்பவர்கள் மனம் சிரித்து சிரித்து லேசாகி விடும்.

சமீபத்தில் அவரிடம் 'மாட்டிகொண்ட' ஒரு அப்பாவி எழுத்தாளரை ( அவரது பழைய நண்பராம்) படு ஆபாசமாக திட்டி எழுதி இருந்ததை படித்தேன். ஆள் யாராக இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் பாவம் இவரிடம் போய் மாட்டிக்கொள்ளும் அளவுக்கு விஷயம் தெரியாதவராய் இருக்கிறாரே என்று நினைத்துகொண்டேன். யானை கொசுவை புணர்ந்த கதை என்றொரு கதையை சொல்லி தான் யானை என்றும் மாட்டியவர் கொசு என்றும் வெளிப்படையாகவே அசிங்கப்படுத்துகிறார் சாரு. சந்தில் அவர் பாடும் சிந்தில் இணைய எழுத்தாளர்களின் தலை வேறு உருள்கிறது. வலைப்பூ எழுத்தாளர்களை முடிந்த அளவு வசை பாடி இருக்கிறார். அவரை பற்றி கிண்டல் செய்து நான் எழுதிய கட்டுரை ஒன்றை படித்த என் நண்பர் ஒருவர், இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட வேண்டியவர் இல்லை சாரு; இதெல்லாம் அவருக்கு (அவரை புணரும்) கொசுக்கடிக்கு சமம். அவரை 'ஜாலியாக' எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். உண்மை தான். ஆனால் இப்படி 'மாட்டும்' அப்பாவிகளை அவர் ஓட்டும்போது நாம் அவரை ஓட்டுவதில் என்ன தப்பு என்று கேட்டேன். விஷயம் தெரிந்த பலர் அவரை சீந்துவதில்லை, பல இலக்கியவாதிகள் இவர் பல்லில் பட பயந்து எதுவும் சொல்வதில்லை.
ஆனால் அவர் பண்ணும் அலம்பலை நினைத்து எந்நேரமும் சிரித்துகொண்டே இருக்க முடியாதே. ஒரு உறையில் ஒரு வாள் தான் இருக்க முடியும். ஒன்று அவர் அல்லது வடிவேல் என்பதால் அதிகம் எரிச்சல் மூட்டாத காமெடியனாக வடிவேலையே எல்லோரும் prefer செய்கிறார்கள் போலும்.

'நான் விகடனில் எழுதுகிறேன் என்றால் அதற்கு பின்னால் முப்பத்தைந்து வருட உழைப்பு (!) இருக்கிறது' எனும்போதே அவர் அந்த பத்திரிக்கையில் எழுத எவ்வளவு ஆர்வமாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. இலட்சியத்தை பார்த்தீர்களா? ஆனால் அதற்கு முன் விகடனை பற்றியும் பிராமணர்களை பற்றியும் முடிந்த வரை கேவலமாக எழுதி இருக்கிறார் என்பது அவரை(யும்) படித்தவர்களுக்கு தெரியும். இன்று விகடனில் எழுதுவது தான் இத்தனை நாள் செய்த இலக்கிய சேவையின் பலனா? சரி இதுவும் இவரது காமெடிகளில் ஒன்று எனலாம். இன்னொரு காமெடி விகடனில் அவர் எழுதிய ஒரு விஷயம். ஆர்மோனிய பெட்டியை 'ஏந்தி' கொண்டு, தேர்ந்த இசை கலைஞரை போல் போஸ் கொடுக்கும் படம் ஒன்றும் அது தொடர்பான கட்டுரை ஒன்றும். மிஷ்கின் செய்த 'புண்ணியங்களில்' ஒன்றாக இந்த மாமனிதரை சினிமாவில் அறிமுகப்படுத்தியதை பற்றியும் அதில் அவர் நீது சந்திரா, மற்றும் அவரால் ஏகத்துக்கும் புகழப்பட்டு பின்பு அதை விட மோசமாக விமர்சிக்கப்பட்ட அமீருடனும் ஒரு பாட்டுக்கு ஆடும் ஆட்டம் பற்றியும் எழுதி இருக்கிறார். பாருங்கள் ஒரு 'இலக்கியவாதி' சினிமாவில் அடையும் இடத்தை. இதற்காக தான் ஆசைப்பட்டாயா மனமே என்று அவரையே கேட்டுக்கொள்வாரோ?

மஹா காமெடி இது தான். அந்த புகைப்படத்தில் அவரை பார்க்கும்போது நடிகர் ஓமர் ஷெரிப் போல் இருப்பதாக ஒரு வாசகி (வேறு யார்?) சொன்னாராம். தலிவர் புளகாங்கிதம் அடைகிறார். அந்த பெண் 'அந்த ஏழு நாட்களில்' பாக்யராஜின் சிஷ்யனாக வரும் 'ஹாஜா ஷெரிப்பை' சொல்லவில்லை என்று நம்புவோம். அவரும் அதில் 'பொட்டி' தானே தூக்குகிறார்.

நங்கள் எல்லாம் எவ்வளவோ படித்து விட்டு, எழுதிவிட்டு, சினிமா பார்த்துவிட்டு எழுதுகிறோம் என்று ஒரு நியாயமான விஷயத்தை சொல்கிறார். இது உண்மையிலேயே சீரியசான விஷயம். உண்மையிலேயே கவனிக்கப்பட்ட படைப்புகளை ஆரம்பத்தில் தந்தார் என்கிற முறையில் அவருக்குரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும் தான். ஆனால் நீர் தொடர்ந்து நன்றாகவே எழுதிக்கொண்டிருந்தால் வாசகர்களாகிய நாங்கள் என்ன 'ரோமத்துக்கு' எழுதபோகிறோம்? நீர் எழுதும் அபத்தத்தை சகிக்க முடியாமல் தானே நாங்கள் எழுத தொடங்கினோம். ஓசியில் இன்டர்நெட் கிடைத்தால் எல்லோரும் ப்ளாக் எழுதுகிறார்கள் என்று வேறு ஒரே புலம்பல். நான் உட்பட பலர் வீட்டில் சொந்தமாக இன்டர்நெட் வைத்திருக்கிறோம். இவரை போல் இன்டர்நெட்டில் 'இதை எழுத வேண்டும் என்றால் ரூபாய். இரண்டாயிரம் அனுப்பவும். இதை எழுதாமல் இருக்க வேண்டும் என்றால் இருபதாயிரம் அனுப்பவும் என்று யாசகமா (கௌரவ வார்த்தை!) எடுக்கிறோம்? இணையம் என்பது திறந்த வெளி. அதில் யார் வேண்டுமானாலும் எழுதலாம். நாங்கள் எழுதுவதால் உமக்கு நட்டம் வந்துவிடும் என்று நீர் பயப்படுவது தான் தெரிகிறதே. இணையத்தில் எழுதியதை (எல்லாம்!) புத்தகமாக்கி இருபத்தேழு முப்பத்தேழு என்று மொய் கணக்காய் வெளியிட்டால் அது ஒரு சாதனையா? மனுஷ்யபுத்திரனை மிரட்டி நீர் செய்யும் அக்கிரமங்களில் இதுவும் ஒன்றல்லவா?

மதுரையில் அடிபட்டு (உண்மையாகவே) மானாமதுரையில் வந்து அழுத கதை தானே உங்கள் கதை? அப்படி இருக்க பாவம்.. உங்களிடம் இலக்கியம் பேச வந்த அப்பாவியை புரட்டிபோட்டு அடிப்பது மட்டும் எந்த விதத்தில் நியாயம் சாரு?

9 comments:

  1. Thiruvalar. Charu avargalai angilatil sonnal: "harum-scarum"(noun) A reckless impetuous irresponsible person

    ReplyDelete
  2. ஹாஹா..இன்னுமா இந்த ஒலகம் தகதிகிமிதாவ நம்பிக்கிட்டிருக்கு:)
    மாதமிருமுறை அல்லது 30 முறை தான் ஒரு காமெடிபீசுங்கிறத அவரே நிரூபிச்சிருவாரு. இன்னும் தொடரணும் அவரு சேவை... :)

    ReplyDelete
  3. இவரையெல்லாம் ஒரு பொருட்டாய் நினைத்துப் பதிவு போட்டுக் கொண்டு உங்கள் அரிதான நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும் சந்திர மோகன்.
    நவீன தமிழ் இலக்கிய களத்தின் அருவருப்பான ஒரு விதூஷகராக மட்டுமே அவரைப் பார்க்க முடிகிறது.

    ReplyDelete
  4. உண்மை தான் அம்மா.. ஆனால் எல்லோரையும் சகட்டுமேனிக்கு வாரிகொண்டிருப்பவரை நாம் வாரினால் என்ன என்று தோன்றியதால் எழுதினேன். இவர் போன்றோர் ஒவ்வொரு துறையிலும் இருக்கிறார்கள்.. இவர் இலக்கிய உலகின் 'கைப்புள்ள'.

    ReplyDelete
  5. சந்திரமோகன்..தங்கள் தளம் நான் விரும்பிப் படிக்கும் தளம்..சாருவை ஒரு சுவராஸ்யத்துக்காகத்தான்,பொழுது போக்காகத்தான் அனைவ்ரும் படிக்கிறார்கள் என்பதைத் தவிர பொருட்படுத்த வேண்டியதில்லை. சீரியஸனா அனைவரும் அவ்ரைப் பொருட்படுத்துவது இல்லை .
    இருந்தாலும் அட்டகாசமான அடைமொழி “கைப்புள்ள’
    பொருத்தமான அடைமொழி

    ReplyDelete
  6. charu in his recent piece in his blog has claimed that he has following as like fan following of MJ!!!!!!! and another reader's wife is not cooking for her family cos she is reading zero degree!!!!! and that his writings has the power to attract very young people!!!!! - comedy thilagamya charu. probably vadivelu (whose market is a bit down i think now) can get new ideas from charu.

    ReplyDelete
  7. My dear friend, we cannot and should not demean someone if we differ with them in principle or otherwise.. That would put us in a low platform. I hope to see real good stuff from you as I know you are capable of doing them.
    Karthik, Chennai

    ReplyDelete