ஜே. எஸ். அனார்கலி எழுதிய
காலம் கவிதை குறித்து கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனிடம் இருந்து வந்த கடிதம்..
காலம்
கதை கேட்டுகொடிருக்கிறது.
விதவிதமான மனிதர்களுடையதும்
விலங்குகளுடையதும்கவியின் பருக்கையில் பசியாறிய பறவையினத்தினுடையதுமான கதைகள்
வளர்மரங்களினுடையதும்
அவற்றிலிருந்து கைவிடப்பட்ட
இலைகளினுடையதும் நகர சந்துகளில்
குத்த வைத்திருக்கும் குல தெய்வங்களினதும்
கதைசொல்லிகளின் கதைகளையும்
கூட
காலம் கேட்டுகொண்டிருக்கிறது.
பார்க்கையில்
காலம்
கதைகளால்
நிரம்பியிருக்கிறது.
அண்மையில் வாசித்த என் மனசில் வேர்பதித்த கவிதைகளை அனார்க்கலி எழுதியிருக்கிறர்.பிரபஞ்சமளாவிய ஆடுகளத்தில் செளிக்கிறது அனார்க்கலியின் கவி மனசு. ஆர்வம் மிக பாராட்டுகிறேன் - வ.ஐ.ச.ஜெயபாலன்
No comments:
Post a Comment