Saturday, September 11, 2010
முரளிக்கு அஞ்சலி ..
நடிகர்களும் முதல்வர் கருணாநிதியும் கலந்து கொண்ட நிகழ்ச்சி அது. சத்யராஜ் தலைமையில் ஒரு நடிகர் குழு ஒன்று முதல்வரிடம் ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறது. "அய்யா.. நீங்க ஒரு உதவி பண்ணனும். நம்ம முரளி ரொம்ப நாளா காலேஜிலேயே படிசிக்கிட்டிருக்கார் ...கொஞ்சம் பெரிய மனசு பண்ணி அவரை எப்படியாவது 'பாஸ்' பண்ண வச்சுருங்க.." என்றதாம் அக்குழு. முரளியும் அங்கு இருந்தாராம். வெடிச்சிரிப்பு கிளம்பியிருக்கும் என்று நான் சொல்ல தேவை இல்லை.
தலையை சாய்த்துக்கொண்டு ஹீரோயின் பின்னாலேயே காதலுடன் அலைந்த ஒரு மாணவ பாத்திரம் நம்மோடு இப்போது இல்லை. கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து படிக்கும் First Graduate கதாபாத்திரத்தை கச்சிதமாய் நடித்து கொடுத்தவர் முரளி.
மிக சிறந்த நடிகர் இல்லை தான் என்றாலும் தமிழின் குறிப்பிடதக்க நடிகராய் இருந்த முரளி அகாலத்தில் இறந்தது பெரும் அதிர்ச்சி.
கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் முரளியின் பிரேதத்தின் நம்ப முடியாத இளமை பார்க்க மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அவரும் தன மகன் நடித்த 'பாணா காத்தாடி' படம் வரை , மாணவனாகவே நடித்திருந்தார் என்று படிக்கும்போது ஆச்சர்யமாகவே இருந்தது. தமிழ் சினிமா சரியாக பயன்படுத்த தவறிய நடிகர்கள் லிஸ்டில் ஒருவராய் மறைந்தே விட்டார் முரளி.
ஆமாம்ணே மனுசன் சின்ன வயசுல போயிட்டாரு. ரெம்ப சங்கடமாத்தான் இருக்கு.அவிங்க குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDelete